அலங்காநல்லூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு கேலரி: மதுரை ஆட்சியர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

அலங்காநல்லூரில் நிரந்தர கேலரி அமைப்பது தொடர்பான மனுவை பரிசீலித்து மாவட்ட ஆட்சியர் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகளவில் பிரபலமானது.

இந்த ஜல்லிக்கட்டைக் காண லட்சக்கணக்கானோர் வருவது வழக்கம். மதுரையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் பார்வையாளர்கள், காளைகள், மாடுபிடி வீரர்களுக்குப் போதுமான இடவசதி செய்து கொடுப்பதில்லை.

இதனால் பார்வையாளர்கள் மரங்களில் ஏறியும், வீடுகளின் மாடிகளில் நின்றும் ஆபத்தான முறையில் ஜல்லிக்கட்டை பார்க்கின்றனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 10 ஆயிரம் பேர் பார்க்கும் அளவிலேயே கேலரி அமைக்கப்படுகிறது. அலங்காநல்லூரில் நிரந்தர பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து பல ஆண்டுகளாகியும் நிரந்தர கேலரி அமைக்கப்படவில்லை. எனவே, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு பார்வையாளர்களுக்கு நிரந்தர கேலரி கட்ட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.

பின்னர் மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். ஆட்சியர் அந்த மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்