ரூ.6,376 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வடசென்னை மிக உய்ய அனல்மின் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் ரூ.6,376 கோடி செலவில் அமைக்கப்பட்டு உள்ள வடசென்னை மிக உய்ய அனல் மின் திட்டம் நிலை 3-ஐ முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில், வடசென்னை அனல் மின் நிலைய வளாகத்தில் 250 ஏக்கர் பரப்பளவில், ரூ.6,376 கோடி மதிப்பீட்டில் நிலக்கரியில் இயங்கும் 800 மெகாவாட் திறன்கொண்ட வடசென்னை மிக உய்யஅனல் மின் திட்டம் நிலை-3 அமைப்பதற்கு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

மிக உய்ய அனல் மின்தொழில் நுட்பத்தில் 800 மெகாவாட் திறனுடைய அலகு தமிழ்நாட்டில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இத்தகைய சிறப்புமிக்க வடசென்னை மிக உய்ய அனல்மின் திட்டம் நிலை-3 செயல்பாட்டுக்குக் கொண்டு வரும் விதமாக தமிழக முதல்வர் பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக, கொதிகலன் எரியூட்டும் நிகழ்வை தொடங்கி வைத்தார். இத்திட்டம் வரும் ஆகஸ்டு மாதம் நிறைவு பெற்று, நாளொன்றுக்கு 19.2 மில்லியன் யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு சுமார் 6 ஆயிரம் மில்லியன் யூனிட்கள் மின்சாரம் தமிழ்நாட்டுக்கு கூடுதலாகக் கிடைக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்