தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதரை மறந்த திரையுலகம்?

By அ.வேலுச்சாமி

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான தியாகராஜ பாகவத ரின் நினைவுநாளில், அவருக்கு அஞ்சலி செலுத்த நாடக நடிகர் கள், திரையுலகினர் ஆர்வம் காட்ட வில்லை என்று அவரது உறவினர் கள் வேதனை தெரிவித்தனர்.

தமிழகத்தில் தொடர்ச்சியாக 3 தீபாவளி பண்டிகையைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய ஒரே திரைப்படம் என்ற பெருமையை தக்க வைத்திருப்பது “ஹரிதாஸ்”. 1944-ல் வெளியான இப்படத்தின் கதாநாயகனாக நடித்தவர் தியாகராஜ பாகவதர்.

1910 மார்ச் 1-ம் தேதி மயிலாடு துறையில் கிருஷ்ணமூர்த்தி-மாணிக்கத்தம்மாள் தம்பதியின் மகனாகப் பிறந்த இவர், சிறுவயதி லேயே குடும்பத்துடன் திருச்சி சங்கிலியாண்டபுரம் கல்லுக்காரத் தெருவில் குடிபெயர்ந்தார். 1926-ல் பொன்மலையில் நடைபெற்ற ‘பவளக்கொடி’ நாடகத்தில் அர்ஜுனன் வேடத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது.

பொன்னிற மேனி, கந்தர்வக் குரலால் நாடக மேடைகளை வசப்படுத்திய அவருக்கு திரை வாய்ப்பு தேடிவந்தது. 1934-ல் பவளக்கொடி நாடகத்தை திரைப் படமாக தயாரித்தபோது, அதில் இவர் கதாநாயகனாக நடித்தார். தமிழகத்தின் இசை மாமேதையாக கருதப்படும் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை இவருக்கு பாகவதர் என்னும் பட்டத்தை வழங்கினார்.

தொடர்ந்து 1936 முதல் 1943 வரை இவர் நடித்த நவீன சாரங்க தாரா, சத்தியசீலன், சிந்தாமணி, அம்பிகாபதி, திருநீலகண்டர், அசோக்குமார், சிவகவி உள்ளிட்ட படங்கள் வசூலை அள்ளிக் குவித்தன. தமிழ்த் திரையுல கின் முதல் சூப்பர் ஸ்டாரான இவருக்கு, 1944-ல் லட்சுமிகாந்தன் கொலைவழக்கு பெரும் பின்ன டவை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 30 மாதங்கள் சிறையிலிருந்த தியாக ராஜ பாகவதர், பின்னர் விடுதலை யானார். அதற்குப் பின் அவர் நடித்த படங்கள் வெற்றி பெற வில்லை.

இதையடுத்து திருச்சி திரும்பிய அவர் வறுமையில் வாடினார். 1959 நவம்பர் 1-ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை பொது மருத்துவமனையில் தியாகராஜ பாகவதர் உயிரிழந்தார். அவரது உடல் திருச்சி சங்கிலியாண்ட புரத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அங்கு அவரது 56-வது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப் பட்டது. திரைப்பட, நாடக நடிகர்கள் சார்பில் நேற்று மதியம் வரை ஒருவர்கூட அஞ்சலி செலுத்த வரவில்லை. உறவினர்கள் சிலரும், அவர் சார்ந்த சமூகத்தினர் சிலரும் அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து திருச்சி கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் இசைத் துறை தலைவர் எஸ்.டி.மூர்த்தி கூறும்போது, “திருச்சிக்கு பெருமை சேர்த்த தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் அமைத்து, இசை, நாடக விழாக்கள் நடத்த வேண்டும்” என்றார்.

விஸ்வகர்மா மகாஜன சபை துணைத் தலைவர் சுப்பண்ணா கூறும்போது, “பணமிருந்தபோது அள்ளிக் கொடுத்த தியாகராஜ பாகவதர், கடைசிக் காலத்தில் வறுமையில் சிக்கி, நோயால் இறந்தார். எம்.ஆர்.ராதா முயற்சி யால்தான் அவரது உடல் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலை அடக்கம் செய்த இடத்தை நாங்கள் பராமரித்து வருகிறோம். நடிகர்கள் சார்பில் சென்னையிலாவது அஞ்சலி செலுத்தியிருக்கலாம். தமிழகமே போற்றிப் புகழ்ந்த கலைஞனுக்கு உரிய மரியாதையை அரசும், கலை உலகத்தினரும் அளிக்க வேண்டும்” என்றார்.

கருணாஸ் அஞ்சலி

தேர்தலில் வாக்களித்த நாடக நடிகர்களுக்கு நன்றி தெரி விப்பதற்காக நடிகர்கள் கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் மணப் பாறைக்கு நேற்று வந்திருந்தனர். அவர்களிடம், தியாகராஜ பாகதவர் நினைவு நாள் குறித்து திருச்சி நடிகர் ஜெரால்டு மில்டன் நினைவுபடுத்தியுள்ளார். இதை யடுத்து இருவரும் மாலையில் சங்கிலியாண்டபுரம் வந்து, அஞ்சலி செலுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்