காங்கிரஸ் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் காஸ் சிலிண்டர் விலை ரூ.140 குறைந்துள்ளது: எச்.ராஜா கருத்து

By செய்திப்பிரிவு

கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் நேற்று பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:

2004-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின்போது ரூ.35.71 என இருந்த பெட்ரோல் விலை, அடுத்த 10 ஆண்டுகளில், அதாவது 2014-ல், காங்கிரஸ் ஆட்சி முடிந்து, பாஜக அரசு பொறுப்பேற்றபோது ரூ.74.71 ஆக உயர்ந்து இருந்தது.

தற்போது பாஜக ஆட்சியில், கடந்த 7 ஆண்டுகளில் ரூ.18 உயர்ந்து லிட்டருக்கு ரூ.92-க்கு விற்பனையாகிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் 10 ஆண்டுகளில் லிட்டருக்கு ரூ.39 உயர்ந்திருந்தது.

அதேபோல, 2004-ல் காங்கிரஸ் கட்சியில் ரூ.266 ஆக இருந்த காஸ் சிலிண்டர் விலை, 10 ஆண்டுகளில், அதாவது 2014-ல் ரூ.920 ஆக உயர்ந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் ரூ.140 விலை குறைந்து ரூ.780-க்கு விற்கப்படுகிறது. உற்பத்தி விலையை கருத்தில் கொண்டு பெட்ரோல், காஸ் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

அப்போது இருந்ததைவிட இப்போது காஸ் சிலிண்டர் விலை குறைவுதான். விலை உயர்வு என இப்படி மு.க.ஸ்டாலின் பொய் பேசி வருவதால் அவரை புழுகுமூட்டை என மக்கள் நினைக்கிறார்கள்.

எனவே மக்கள் திமுக- காங்கிரஸ் கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் பாவத்தின் சுமை தாங்காமல்தான் புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்துள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்