இடைக்கால பட்ஜெட்டில், உயர்கல்விக்காக மொத்தமாக 5,478.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று (பிப். 23) 2021-2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
இதில், உயர்கல்வித்துறை குறித்து ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
"தமிழ்நாட்டின் இளம் மக்கள்தொகை சார் ஆதாயத்தினையும், இளைஞர்களின் ஆற்றலையும், மனித வளமாக மாற்றுவதற்கு இந்த அரசு உயர்கல்வித் துறையின் மூலம் முக்கியமான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
» தமிழ்நாட்டின் கடன் சுமையை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்த்தியதே அரசின் சாதனை: நவாஸ் கனி எம்.பி பேட்டி
தமிழ்நாட்டின் மொத்தச் சேர்க்கை விகிதம் தற்போது 49 சதவீதம் ஆகும். இது தேசிய சராசரி விகிதத்தை விட இரு மடங்கு அதிகமாகும். 2018-19 ஆம் ஆண்டின் பாலின சமநிலைக் குறியீடு 0.97 ஆக உள்ளது. பெண்களுக்கு சமமான பள்ளி வசதிகள் வழங்கப்பட்டுள்ளதை இது எடுத்துக்காட்டுகிறது. 2011-12 ஆம் ஆண்டு முதல், 37 இருபாலர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 3 அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 21 பல்தொழில்நுட்பக் கல்லூரிகளையும் 4 அரசு பொறியியல் கல்லூரிகளையும் அரசு நிறுவியுள்ளது.
வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் நோக்கத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,577 புதிய பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விக்கட்டண சலுகை ஒவ்வொரு ஆண்டும் 2 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதற்காக, 2020-21 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீடுகளில் 391.50 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் உயர்கல்விக்காக மொத்தமாக 5,478.19 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது".
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago