சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் பேரூராட்சி நிர்வாகம் வியாபாரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழகத்திலேயே முதன்முறையாக மகளிர் வாரச்சந்தையை இன்று தொடங்கியது.
திருப்பத்தூரில் பேரூராட்சி அலுவலகம் அருகே சனிக்கிழமைதோறும் வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகம் பழைய கடைகளை இடித்துவிட்டு சந்தையை சீரமைத்து வருகிறது.
இதற்காக வாரச்சந்தையை தற்காலிகமாக மதுரை சாலை அருகேயுள்ள இடத்திற்கு மாற்றியது. முறையான தகவல் தெரிவிக்காமல் வாரச்சந்தையை மாற்றியதாவும், தற்காலிக இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும் கூறி வியாபாரிகள் போராடி வருகின்றனர். இதனால் 4 வாரங்களாக வாரச்சந்தையை நடக்கவில்லை.
இந்நிலையில் வியாபாரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வாரச்சந்தைக்காக ஒதுக்கிய அதே இடத்தில் மகளிர் வாரச்சந்தையை பேரூராட்சி நிர்வாகம் இன்று தொடங்கியது.
» நாகர்கோவில், மார்த்தாண்டத்தில் பெட்ரோல், கேஸ் விலை உயர்வைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்
தமிழகத்திலேயே முதன்முறையாக தொடங்கிய மகளிர் சந்தையில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் 20-க்கும் மேற்பட்ட கடைகளை அமைத்தனர்.
அவர்கள் காய்கறிகள், பழங்கள் மட்டுமின்றி தாங்கள் தயாரித்த அலங்காரப் பொருள்கள், வத்தல், வடகம், வயர்கூடை உள்ளிட்ட பொருட்களையும் விற்பனை செய்தனர்.
நான்கு வாரங்களாக வாரச்சந்தை நடக்காதநிலையில் இன்று நடந்த மகளிர் சந்தையில் பொதுமக்கள் பொருட்களை வாங்கிச் சென்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago