தமிழக அரசு எப்படி கூட்டுறவுக் கடனை தள்ளுபடி செய்ய முடியும்? கார்த்திக் சிதம்பரம் எம்.பி. கேள்வி

By கி.தனபாலன்

கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாடு ரிசர்வ் வங்கியிடம் உள்ள நிலையில் தமிழக அரசு எப்படி கூட்டுறவு கடனை தள்ளுபடி செய்ய முடியும் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் கலந்து கொண்டார்.

இதில் மாவட்ட செயலாளர் செல்லத்துரை அப்துல்லா, மானாமதுரை சட்டமன்ற பொறுப்பாளர் சஞ்சய் காந்தி, பரமக்குடி நகர தலைவர் அப்துல்அஜீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து எம்.பி. கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசுகையில்....

கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாடு ரிசர்வ் வங்கியிடம் உள்ளது. தமிழக அரசு எப்படி கூட்டுறவுg கடனை தள்ளுபடி செய்ய முடியும் என்ற சந்தேகம் உள்ளது. கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாடு ரிசர்வ் வங்கியிடம் சென்ற பிறகு கடனை தள்ளுபடி செய்கிறார்களா அல்லது கடனை அடைகிறார்களா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்‌.

கடன் கொடுத்தவர் கடனை தள்ளுபடி செய்யலாம், மூன்றாவது நபர் கடனை அடைக்கலாம். ஆனால் தமிழக அரசின் அறிவிப்பின் மூலம் கடனை அடைக்கப் போகிறார்களா அல்லது கடனை ரத்து செய்கிறார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

கூட்டுறவு வங்கியில் கடன் ரத்து மூலம் பயன் பெறுபவர்கள் எதிர்காலத்தில் எவ்வித கடனும் பெற முடியாது‌. வீடு, பைக் கடன் வாங்க முடியாத அளவிற்கு அவர்கள் தள்ளப்படுவார்கள். இதனை எல்லாம் தமிழக அரசு தெளிவுபடுத்தவில்லை‌ இதில் எனக்கு சந்தேகம் உள்ளது‌‌.

மக்களின் கோபம், வருத்தம் அனைத்தையும் தேர்தல் மூலமாக தெரியவரும். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது கச்சா விலை உயர்வாக இருந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கட்டுப்பாட்டுடன் இருந்தது‌

வெளிநாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் தற்போது அதனை விட அதிக அளவில் பெட்ரோல், டீசல் விலை உள்ளது வெளிநாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் செஸ் வரி விதிப்பால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகளவில் உள்ளது‌.

மத்திய அரசு அனைத்து வரிகளிலும் 41 சதவீதம் மாநில அரசுகளுடன் பங்கிட்டுக் கொள்ளலாம். ஆனால் செஸ் வரியை மட்டும் முழுமையாக வைத்துக்கொள்கிறது.

செஸ் வரி மூலமாக எவ்வளவு பணம் வர உள்ளது அதனை எதில் முதலீடு செய்ய உள்ளனர் என்பதை மத்திய அரசு பட்ஜெட்டில் சொல்லவில்லை.இது முழுக்க முழுக்க மக்கள் விரோத செயல். பணம் மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி விதிப்பு, ஊரடங்கு காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் கஜானா காலியானது. அதனை சரி செய்வதற்காக மக்கள் மீது செஸ் வரி செலுத்தி பணத்தை மீட்கின்றனர்.

தமிழகத்தில் இருப்பது உண்மையான மாநில அரசு இல்லை. பாஜக விற்கு பினாமியாக தமிழக அரசு உள்ளது. தற்போது இருப்பது உண்மையான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை. எம்ஜிஆர் நிறுவிய உண்மையான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது இல்லை‌. முழுக்க முழுக்க பாஜகவிற்கு பினாமியாக உள்ள ஒரு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக உள்ளது.

அதனால் மத்திய அரசும் இந்த தேர்தலில் ஒரு மைய பிரச்சனையாக தான் இருக்கும். வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்