ரஜினி- கமல் திடீர் சந்திப்பு: ஆதரவை கேட்டாரா?

By செய்திப்பிரிவு

நடிகர் ரஜினிகாந்தை மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசன் திடீரென சந்தித்து பேசினார். தனது நாற்பாதாண்டு கால நண்பரை கரோனா தொற்றுக்குப்பின் சந்தித்த கமல் அரசியல் ரீதியாக தனது கட்சிக்கு ஆதரவை கேட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

திரையுலகில் எம்ஜிஆர் சிவாஜிக்குப்பின் ஆதிக்கம் செலுத்திய கமல் ரஜினி இருவரும் திரையுலகில் போட்டியிலிருந்தாலும் தனிப்பட்ட முறையில் தீவிர நட்பு பாராட்டி வந்தனர். அரசியலுக்கு வருவேன், வருவேன் என ரஜினி கூறி வந்தாலும் திடீரென அறிவித்து அரசியல் கட்சியையும் ஆரம்பித்து மக்களவை தேர்தலையும் சந்தித்துவிட்டார் கமல்.

கமல் கட்சி ஆரம்பித்த பின்னரும் ரஜினி கட்சி ஆரம்பிக்கும் அறிவிப்பு வந்தது. அப்போதும் இருவரும் தமிழக நலனுக்காக இணைந்து பணியாற்றுவேன் எனத் தெரிவித்திருந்தனர். கமலும் அரசியலில் அனைவரிடமும் ஆதரவு கேட்கும் நான் என் நண்பரிடம் கேட்க மாட்டேனா எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் உடல் நலன் பாதிப்பால் கட்சி ஆரம்பிக்கவில்லை என ரஜினி முடிவெடுத்தபோது நண்பர் அரசியலை விட அவரது உடல் நலனை முக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என விருப்பம் தெரிவித்தார் ரஜினி. கரோனா தொற்று காலத்தில் இருவரும் நேரில் சந்தித்துக்கொள்ளாவிட்டாலும் பரஸ்பரம் போனில் பேசி வந்தனர்.

ரஜினியின் உடல் நலன் பாதிப்பு குறித்து அவரிடம் நேரில் சென்று விசாரிப்பேன் என கமல் அறிவித்திருந்தார். ஆனால் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை, பிக்பாஸ், தேர்தல் பிரச்சாரம், கரோனா தொற்று பிரச்சினை என்பதால் சந்திப்பு தள்ளிக்கொண்டே போனது.

இந்நிலையில் ரஜினிகாந்த் நீண்ட நாட்களுக்குப்பின் வெளியில் வந்தார். இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு ரஜினி சென்றார். இதனால் ரஜினி சகஜ நிலைக்கு திரும்பியதை அனைவரும் அறிய முடிந்தது. இந்நிலையில் கமல் இன்று திடீரென ரஜினி வீட்டுக்குச் சென்றார். சுமார் 45 நிமிடம் நேரம் இருவரும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது சந்திப்பின்போது சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்துக்கு ரஜினியின் ஆதரவை கமல் கேட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரஜினி பொதுவாக எந்த முடிவையும் நிதானமாக எடுக்கக்கூடியவர். அவருக்கு பாஜக, திமுக, அதிமுக என அனைத்துக்கட்சிகளிலும் நண்பர்கள் உள்ளனர்.

40 ஆண்டுகால நண்பருக்காக மட்டும் அரசியல் அறிவிப்பை ரஜினி வெளியிடுவாரா அல்லது வழக்கம் போல் யூகங்களை ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் விட்டுவிடுவாரா என்பது போகப்போகத்தான் தெரியும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்