சித்தா, ஆயுர்வேதா, யுனானி படிப்புகளுக்கு ஜூலையில் விண்ணப்பம்

By சி.கண்ணன்

சித்தா, ஆயுர்வேதா யுனானி உட்பட 5 படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் கீழ் அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவ கல்லூரி, யுனானி மருத்துவ கல்லூரி, யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் சித்த மருத்துவ கல்லூரி, மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் ஓமியோபதி மருத்துவ கல்லூரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டாறில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி என மொத்தம் 6 அரசு கல்லூரிகள் உள்ளன. இதேபோல 5 தனியார் சித்த மருத்துவ கல்லூரிகள், 3 தனியார் ஆயுர்வேத கல்லூரிகள், 8 தனியார் ஓமியோபதி கல்லூரிகள், 4 தனியார் யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரிகள் என மொத்தம் 20 தனியார் கல்லூரிகள் உள்ளன.

இந்தக் கல்லூரிகளில் 2014-15-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக இயற்கை மருத்துவத்திற்கான மத்திய கவுன்சில், ஆய்வு நடத்தி முடித்துள்ளது. அதே போல அரசு மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் ஓமியோபதி கவுன்சில் ஆய்வு நடத்தியது. இந்நிலையில் இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் ஜூலை இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் உயர் அதிகாரி கூறியதாவது: சித்தா, ஆயுர்வேத, யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஓமியோபதி அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் கவுன்சில் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆண்டு கல்லூரிகளில் எவ்வளவு மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பது தொடர்பாக கவுன்சில் அறிவிக்கும். ஜூலை இரண்டாவது வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்படும். ஆகஸ்ட் மாதம் இறுதி அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் கவுன்சலிங் நடைபெறும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்