டெங்கு காய்ச்சலை குணப்படுத்தும் நிலவேம்பு கசாயத்தை தயா ரித்து 3 மணி நேரத்தில் குடித்து விட வேண்டும் என்று சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் எம்.பிச்சையா குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு அலோபதி மருந்து கை கொடுக்காததால், சித்த மருந்தை தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மற் றும் அரசு நடத்தும் அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப் பட்டு வருபவர்களுக்கு நிலவேம்பு கசாயம் (குடிநீர்) கொடுக்கப்படு கிறது. இதன் மூலம் காய்ச்சல் குறைவதுடன் ரத்த தட்டணுக்க ளும் அதிகரிக்கின்றன. டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப் புகளும் தடுக்கப்படுகின்றன.
நிலவேம்பு கசாயத்தை முறையாக எப்படி தயாரித்து குடிப்பது என்று சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டரும், தமிழ் நாடு சித்த மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான டாக்டர் எம்.பிச்சையா குமார் கூறியதாவது:
நிலவேம்பு பொடி என்பது நில வேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற் படாகம், சுக்கு, மிளகு, கோறைக் கிழக்கு போன்றவை சேர்ந்த பொடியாகும். 5 கிராம் முதல் 10 கிராம் அளவு நிலவேம்பு பொடியை 200 மிலி தண்ணீரில் போட்டு 50 மிலி அளவுக்கு சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அப் போதுதான் காய்ச்சலை குணப்படுத் துவதற்கான வேதிப்பொருட்கள் தண்ணீரில் கலந்து மருந்தாக மாறும். அதன்பின் கசாயத்தை வடிகட்டி குடிக்க வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் காலை, மதியம், இரவு என 3 வேளையும் குடிக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட கசாயத்தை 3 மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். அதற்கு மேல் அதில் வீரியம் இருக்காது. அதன்பின் குடித்தால் எந்த பலனும் இருக்காது. எனவே ஒவ்வொரு வேளைக்கும் கசாயத்தை புதிதாக தயாரித்து குடிப்பதே நல்லது.
சாப்பிடுவதற்கு முன்பு..
சாப்பிடுவதற்கு 15 நிமிடத்துக்கு முன்பு நிலவேம்பு கசாயத்தை குடிக்க வேண்டும்.
பெரியவர்கள் 30 மிலி முதல் 50 மிலி வரையும், 1 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 5 மிலி முதல் 10 மிலி வரையும் குடிக்க வேண்டும். நிலவேம்பு கசாயம் கசப்பாக இருப்பதால் குழந்தைகள், சிறுவர்கள் குடிக்க மிகவும் கஷ்டப்படுவார்கள். கசாயத்தை குடித்த பிறகு அவர் களுக்கு தேன், பனை வெல்லம், ஆடாதோடை மணப்பாகு போன்ற வற்றை கொடுக்கலாம். ஆனால் கசாயத்துடன் இவற்றை கலந்து கொடுக்கக்கூடாது.
காய்ச்சல் குறைந்த பிறகு கசாயம் குடிப்பதை நிறுத்திவிடலாம். அதன்பின் குடித்தாலும் தவறு ஒன்றும் இல்லை. நிலவேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதுடன் உடலில் ரத்த தட்டணுக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக் கிறது. சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது. அலோபதி மருந்து பக்க விளைவுகளை ஏற் படுத்தும். ஆனால் பக்க விளைவு கள் இல்லாததது இந்த மருந்து.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வெந்நீரில் கலந்து குடித்தால் பலன் இல்லை
நிலவேம்பு பொடியை வெந்நீரில் கலந்து குடிப்பதும், நேரடியாக வாயில் போட்டு விழுங்குவதும் கூடாது. அதனால் எந்த பலனும் இல்லை. காய்ச்சலும் குணமாகாது. சித்த மருத்துவத்தில் ஒவ் வொரு மூலிகையையும் இப்படித்தான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. அதன்படி சூரணம், லேகியம், மாத்திரை கள் என பல்வேறு வகைகள் உள்ளன. நிலவேம்பு பொடியை கசாயமாகத் தான் குடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.
பச்சிளம் குழந்தைக்கு வேண்டாம்
பிறந்தது முதல் 6 மாதம் வரையுள்ள குழந்தைக்கு தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். வேறு எந்த மருந்தையும் கொடுக்கக் கூடாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தாய்ப்பாலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியே குழந்தைக்கு போதுமானது. அதனால் ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயத்தை கொடுக்க வேண்டாம்.
போலியாக மாத்திரை விற்பனை
நிலவேம்பு பொடி, மாத்திரை வடிவில் கடைகளில் விற்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன. நிலவேம்பு பொடியை மாத்திரையாக தயாரித்து விற்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. மாத்திரையாக தயாரிப்பதற்கான ஆராய்ச்சியும் நடைபெறவில்லை. போலியாக யாரோ மாத்திரையாக தயாரித்து விற்பனை செய்கின்றனர். அதனை யாரும் வாங்கி சாப்பிட வேண்டாம்.
சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாம்
சர்க்கரை நோயாளிகள் நிலவேம்பு கசாயத்தை குடித்தால், சர்க்கரையின் அளவு குறைந்து பாதிப்பை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. அது தவறான தகவல். சித்த மருந்து எப்போதும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாது. சர்க்கரை நோயாளிகளும் நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். எந்த பாதிப்பும் இருக்காது. காய்ச்சல் குணமாகும். சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago