தேர்தலுக்குப் பின்பு அதிமுகவை பாஜக நிச்சயம் அழித்துவிடும்: தொல்.திருமாவளவன் பேச்சு

By கே.கே.மகேஷ்

தேர்தலுக்குப் பின்பு அதிமுகவை பாஜக நிச்சயம் அழித்துவிடும் மதுரையில் இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தொல்.திருமாவளவன் பேசினார். மேலும், மோடியா? லேடியா? என்ற ஜெயலலிதா கேட்டதைப் போல எடப்பாடியால் கேட்க முடியுமா எனவும் அவர் வினவினார்.

மதுரையில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எழுச்சி மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியபோது:

தேர்தல் வரக்கூடிய சூழலில் இந்த மாநாட்டில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது அதனை வரவேற்று வழிமொழிகிறேன்.

திமுக கூட்டணியை வெற்றியோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைத்து கட்சிக்கும் உண்டு, கூட்டணியை சிதறடிக்க கங்கனம் கட்டிக் கொண்டு சனாதான அதிமுக பாஜக முயற்சிகளை மேற்கொண்டு சதிச் செயல்களில் ஈடுபட்டுவருகின்றன.

இன்றைய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைத் தோலுரித்துக்காட்ட வேண்டும் , சனாதான கட்சிக்கு வரும் தேர்தலில் அடிக்கிற அடியில் தமிழகத்தின் பக்கமே தலைவைத்துகூட படுக்கக்கூடாது என்ற எண்ணம் வரும் வகையில் செயல்பட வேண்டும்.

பாஜகவின் செயல்திட்டங்களை தீர்மானிப்பது ஆர்எஸ்எஸ். அனைத்து மாநிலங்களில் பாஜக ஆள வேண்டும் என்பது அவர்களது கனவு. ஒரே கட்சி ஒரே ஆட்சி என்பதும், மாநில கட்சிகளை ஒழிக்க வேண்டும் என்பதும் தான் பாஜகவின் அதற்காக தேர்தலுக்கு முன் பின்னும் ஒவ்வொரு விதத்தில் செயல்படுவார்கள்.

தேர்தலுக்காக பாஜக எந்தவித அராஜகத்தையும் நிகழ்த்துவார்கள். சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் கட்சிகளை பிரிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது கேவலமான அரசியல்.

பாஜக மேற்குவங்காளம், புதுச்சேரியில் கேவலமான அரசியலை முன்னெடுக்கின்றது. அதிமுக என்ற கட்சியின் மீது ஏறி பாஜக தன்னை வளர்த்துவருகிறது. இதற்காக சாதி சங்கங்கள், மதவெறி அமைப்புகளை வளர்த்துவருகிறது, இது தெரியாமல் சிலர் அவர்களிடம் சிக்கியுள்ளனர்.

சாதி அடிப்படையில் ஊக்கப்படுத்தி அனைத்து சாதியினருக்கும் பாதுகாப்பு, இந்துக்களின் பாதுகாப்பு எனக் கூறி ஏமாற்றுவது பாஜகவின் திட்டம் அயோத்தி ராமர் பற்றி பேசினால் இங்கே எடுபடாது என்பதால் அறுபடை முருகனை வைத்து அரசியல் செய்கின்றனர்.

மோடி வள்ளுவரையும், ஔவையாரையும் பற்றிப் பேசுவது தமிழ் இனத்தை ஏமாற்றும் மோசடி. மோடி உலகமகா நடிகர். தமிழ் மொழியை அழிக்க இந்தி புகுத்தப்படுகிறது. பேச ஆள் இல்லாத சமஸ்கிருத்த்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறர்கள். சமூக நீதியை அழித்து ஒழித்து இந்து ராஷ்ட்ரீயத்தை உருவாக்கும் முயற்சிகளை கையில் எடுக்கிறது பாஜக.

இந்தியா விற்பனைக்கு என்றும் மட்டும் தான் எழுதவில்லை என்ற அவலம் ஏற்பட்டுள்ளது. அதிமுக தமிழகத்தில் பாஜகவிற்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது அதிமுகவை பாஜக காலி செய்யப்போகிறது.

மாற்று கருத்தே இருக்கக் கூடாது என்பது பாசிச சிந்தனை. இது மிகக் கேவலமான அரசியல். திமுக, அதிமுக இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற கூறிய பாஜகவோடு அதிமுக கைகோர்த்துள்ளது. தமிழகத்தில் பெரியார் சிலையை அவமதிக்கும் போது அதிமுக கண்டுகொள்ளவில்லை. தமிழகத்தில் பாஜக அதிமுகவின் முதுகில் ஏறி அதிமுகவை அழிக்கும் வேலையைச் செய்கிறது.

தேர்தல் முடிந்த பின்பு இரட்டை இலையில் வெற்றிபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினரைக் கூட பாஜக மிரட்டி அழைத்துசெல்லும்.ஜெயலலிதா இல்லாத நிலையில் கோடி கோடியாக கொள்ளை அடித்ததால் அதனைக் காப்பற்ற வருமானவரித்துறை மூலமாக மிரட்டி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களை பாஜக கையில் எடுக்கும் .

அதிமுகவில் ஜெயலலிதா இல்லாத நிலையில் ஒன்றியச் செயலாளரும் கோடீஸ்வரனாக உள்ளதால் அச்சத்தில் பாஜகவிடம் அடிமையாகியுள்ளனர். அதிமுகவை காலி செய்யும் வேலையை பாஜக பார்க்கிறது.

திமுக தலைமையில் ஆட்சி உருவானால் திமுகவிற்கு எதிராக அதிமுக அல்ல பாஜக தான் என்ற நிலை உருவாக வேண்டும் என்பது தான் பாஜகவின் எண்ணம்.

நிச்சயம் இபிஎஸ்- ஓபிஎஸ்ஸால் அதிமுகவைக் காப்பாற்ற இயலாது. திமுக, அதிமுக இருப்பதால் தான் பாஜக கால் ஊன்ற முடியாத நிலையில் தற்போது அதிமுக மூலம் கால் ஊன்ற பார்ப்பதை தடுக்க வேண்டும்.

மோடியா? லேடியா? என்ற ஜெயலலிதா கேட்டதைப் போல எடப்பாடியால் கேட்க முடியுமா ஏன் என்றால் எடப்பாடி கை சுத்தமில்லை என்பதால் அவருக்குப் பயம்.

பாஜக குறைந்த இடத்தைப் பெற்று அதிமுக வெற்றிக்கு பின்னால் இருந்து தேர்தலுக்கு பின் அதிமுக எம்எல்ஏக்களை பாஜகவிற்கு தூக்கிச்செல்லும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கேவலமான செயல்களை பாஜக சூழ்ச்சி செய்யும்.

வடமாநில சனாதான சங்கிகள் தமிழகத்தின் பக்கமே தலைவைத்து படுக்ககூடாது என்ற எண்ணம் வரையில் வரும் தேர்தலில் சரியான அடி கொடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

16 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்