திமுக ஆட்சியில் இருந்தபோதே ஸ்டாலின் ஏதும் செய்யவில்லை: அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேட்டி

By இ.ஜெகநாதன்

’’ஸ்டாலின் வருகிறார், நல்லாட்சி தருகிறார் என விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே ஆட்சியில் இருக்கும்போது ஒன்றும் செய்யவில்லை. அவர் வெத்துவேட்டு’’ என கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாது: பிப்.21-ம் தேதி புதுக்கோட்டையில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

மேலும் விவசாயிகளுக்கு உற்ற நண்பனாக முதல்வர் திகழ்கிறார். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நன்மை செய்யும் அதிமுக அரசு மீது மக்கள் விசுவாசமாக இருக்க வேண்டும்.

'ஸ்டாலின் வருகிறார், நல்லாட்சி தருகிறார்' என விளம்பரப்படுத்தி வருகின்றனர். ஆனால் அவர்கள் ஏற்கெனவே ஆட்சியில் இருக்கும்போது ஒன்றும் செய்யவில்லை. அவர் ஒரு வெத்துவேட்டு.

ப.சிதம்பரம் தேர்தல் நேரத்தில் அறிவிப்பது எல்லாம் வெத்து மத்தாப்பு என்கிறார். ஆனால் முதல்வர் பழனிசாமி, ஒவ்வொரு திட்டத்தையும் அறிவித்ததோடு விட்டுவிடாமல் அதற்குரிய நிதியையும் உடனுக்குடன் ஒதுக்கி செயல்படுத்துகிறார்.

பயிர்க் கடனுக்கு உடனடியாக அரசாணை வெளியிடப்பட்டது. காவிரி - குண்டாறு திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கப்பட்டது. காவிரி குடிநீர் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் செய்கிறோம் என்றெல்லாம் இல்லை. உடனுக்குடன் செயல்படுத்தப்படுகிறது.

அதனால் அவர் கூறுவது போல் வெத்து மத்தாப்பு என்பது எல்லாம் கிடையாது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு எல்லாம் மத்திய அரசு பிரச்சினை. கண்டனூர் கதர்கிராம மையம் கரோனாவால் மூடப்பட்டிருந்தது. தற்போது செயல்பட்டு வருகிறது, என்று கூறினார்.

மேலும் அமைச்சர் பாஸ்கரன் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் குறித்து கூறும்போது, காவிரி-குண்டாறு திட்டம் மூலம் உபரிநீரை தென்மாவட்டங்களுக்கு கொண்டு வருவதற்கு முதல்வர் ஆர்வமாக உள்ளார் என கூறுவதற்கு பதில் கழிவுநீர் கொண்டு வருவதாகக் கூறினார். இதனால் அங்கிருந்தோர் அதிர்ச்சி அடைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்