திருப்பூர் மாவட்டம் அவிநாசி சாலை, பல்லடம் சாலை, பெருமாநல்லூர் சாலை, ரயில் நிலையம் சாலை, ராயபுரம், காதர்பேட்டை ஆகிய பகுதிகளிலுள்ள உணவகங்களில், உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் விஜயராஜா உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பயன்படுத்திய சமையல் எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்பட்டதா, பாலித்தீன் பயன்பாடு, செயற்கை நிறம் பூசப்படுகிறதா, அஜினமோட்டோ பயன்படுத்தப்படுகிறது என, 42 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.
இதில், செயற்கை வண்ணம் பூசப்பட்ட சில்லி சிக்கன் 2.5 கிலோ, காளான் 2 கிலோ, ஒரு முறை பயன்படுத்தக்கூடிய தடை செய்யப்பட்ட பாலித்தீன் சுமார் 3 கிலோ வீதம் 3 கடைகளில் பறிமுதல் செய்யப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அபராதமாக ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.2000 வீதம் விதிக்கப்பட்டது.
சுத்தமில்லாமல் உணவு தயாரித்து விற்பனை செய்த 3 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. துரித வகை உணவுகளை தயார் செய்பவர்கள், தினமும் சமையல் எண்ணெய்யை மாற்ற வேண்டும். குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அஜினமோட்டோ போன்ற உணவுகள் வழங்கக்கூடாது. உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமானது மற்றும் தரமானதாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. உணவகங்களில் கலப்பட உணவு சம்பந்தப்பட்ட புகார்களை 94440-42322 என்ற எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
10 hours ago