திருவண்ணாமலை: அதானி, அம்பானி குடும்பத்துக்காக மோடியின் ஆட்சி நடைபெறுகிறது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டினார்.
திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட மதிமுக தேர்தல் நிதியளிப்புக் கூட்டம் தி.மலையில் நேற்று மாலை நடைபெற்றது. தேர்தல் நிதியாக ரூ.28 லட்சத்து 5 ஆயிரத்து 824-ஐ பெற்றுக் கொண்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசும்போது, “திராவிட கொள்கைகளை காப்பாற்றவும், பெரியார் மற்றும் அண்ணாதுரையின் லட்சியங்களை பாதுகாக்கவும், இந்துத்துவா மற்றும் சனாதன சக்திகளின் முயற்சியை முறியடிக்கவே, திமுகவுடன் இணைந்து செயல்படுகிறோம். ஸ்டெர்லைட், மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்டிரினோ, ‘நீட்' நுழைவுத் தேர்வு, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை எதிர்த்து போராடியது மதிமுகதான்.
7 தமிழர்கள் விடுதலைக்காக நீதிமன்றத்துக்கு சென்று சட்டப்போராட் டத்தை நடத்தி, பேரறிவாளன் உள்ளிட்டவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து ஆணையை பெற்றது மதிமுகதான்.
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கொட்டும் பனியில் போராடி வரும் விவசாயிகளை பற்றி கவலையில்லாமல் பிரதமர் மோடி அலட்சியமாக உள்ளார். அதானி, அம்பானி குடும்பத்துக்காக அவருடைய ஆட்சி நடைபெறுகிறது” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago