சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம்: தேவேந்திரர் அறக்கட்டளை முடிவு

By செய்திப்பிரிவு

சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளதாக தேவேந்திரர் தன்னார்வ அறக்கட்டளை மாநில தலைவர் தங்கராஜ் தெரிவித்தார்.

பெரம்பலூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பட்டியலினத்தவர் பட்டியலில் உள்ள குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உட் பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்ற எங்களது கோரிக்கையை ஏற்று மத்திய அரசுக்கு, தமிழக முதல்வர் பழனிசாமி பரிந்துரைத்தார். இதை ஏற்று 7 பட்டியலின உட்பிரிவை சேர்ந்தவர்களை தேவேந்திர குல வேளாளர் என்றழைக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப் பட்டது.

சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பேசு கையில், தேவேந்திர குல வேளாளர் என அரசாணை விரை வில் வெளியிடப்படும் என அறி வித்துள்ளார்.

எங்களது கோரிக்கையை ஏற்று செயல்படுத்திய பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி ஆகி யோருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தமிழக சட்டப் பேரவை தேர்தலில் பாஜக கூட் டணியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்வோம்.

தமிழகத்தில் எங்களது சமு தாயத்தை சேர்ந்த வாக்காளர்கள் 60 லட்சம் பேர் உள்ளனர். இதனால் அதிமுக கூட்டணிக்கு 50 முதல் 70 தொகுதிகளில் கூடுதல் வெற்றி வாய்ப்பு உள்ளது என்றார்.

பேட்டியின்போது, மாவட்டத் தலைவர் செல்வக்குமார் உடனி ருந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்