ரூ.12110.74 கோடி பயிர்க்கடன் தள்ளுபடியால் பயன் பெறாத விவசாயிகள்: திருத்தம் செய்ய விவசாயிகள் சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

பயிர்க்கடன் தள்ளுபடியில் சில குளறுபடிகள் காரணமாக விவசாயிகள் பலருக்கு அதன் பலன் கிடைக்கவில்லை, தமிழக அரசு சில திருத்தங்களை செய்தால் முழுமையான பலன் உரிய விவசாயிகளுக்கு கிடைக்கும் என விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இன்று விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

“தமிழ்நாடு அரசு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பயிர்க்கடன் தள்ளுபடி அறிவித்தது. ஜனவரி/31/2021 வரை பெற்றுள்ள பயிர்க்கடன் 12110.74 கோடி ரூபாய் 16 லடசத்து,43 ஆயிரத்து, 347 விவசாயிகளுக்கு தள்ளுபடி என்று அறிவித்துள்ளது. இந்த கடன் தள்ளுபடி அரசாணையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பலன் பெற முடியாத நிலை உள்ளது.

குறிப்பாக 2016-ம் ஆண்டு குறுகிய கால கடனை மத்திய கால கடனாக மாற்றி மூன்று தவணைகளாக திருப்பிச் செலுத்த அரசு உத்தரவிட்டது. இந்த விவசாயிகளுக்கு இப்போது அரசு அறிவித்த கடன் தள்ளுபடி என்பது கிடைக்கவில்லை.

அடுத்து ஜனவரி 31 ஞாயிற்றுக்கிழமை என்பதால் மத்திய கூட்டுறவு வங்கி விடுமுறை. ஜனவரி 30-ம் தேதி அனுமதிக்கப்பட்ட கடன் பிப்-1 அல்லது 2ந் தேதி தான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி சலுகை கிடைக்கவில்லை.

எனவே, தமிழக அரசு, 2016-ம் ஆண்டு குறுகிய கால கடனை மத்திய காலக்கடனாக மாற்றப்பட்ட விவசாயிகளுக்கும், அரசு உத்தரவை ஏற்று கடனை திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி கிடைத்திடும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜனவரி 30-ந் தேதி வரை அனுமதிக்கப்பட்ட பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அரசாணையில் திருத்தம் செய்து வெளியிட்டால் தான் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடைக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

ஆகவே, முதலமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சனையில் நேரடியாக தலையிட்டு குறைபாடுகளை சரிசெய்து புதிய அரசாணை வெளியிட துரித நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது”.
இவ்வாறு விவசாயிகள் சங்கம் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்