இலங்கை தமிழர்கள் கண்ணியத்துடன் வாழ நடவடிக்கை: பிரதமர் மோடி உறுதி

By செய்திப்பிரிவு

இலங்கை தமிழர்கள் சமத்துவம், கண்ணியத்துடன் வாழ்வதற்கு அந்நாட்டு அரசுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க சென்னை வந்தார். காலையில் விமானம் மூலம் வந்த அவர், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை அடையாறு ஐ.என்.எஸ் தளத்திற்குச் சென்றார்.

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் நேரு உள் விளையாட்டரங்கம் வந்தடைந்தார். பிரதமர் வரும் வழி எங்கும் அதிமுக, பாஜக தொண்டர்கள் அவருக்குக் கொடி அசைத்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்புரையாற்றினார். அடுத்து முதல்வர் பழனிசாமி பேசினார். நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேசினார். அவர் பேசியதாவது:

மீனவர்களின் உரிமைகளை பாதுகாப்போம் என உறுதி அளிக்கிறேன். இலங்கை அரசால் கைது செய்யப்படும் மீனவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இலங்கை சிறைகளில் இப்போது ஒரு இந்திய மீனவர்கூட இல்லை. மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளில் இதுவரை 313 படகுகள் விடுவிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள படகுகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் இந்தியாவின் கடலோர பகுதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பல திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

மீன்பிடி தொழிலுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. கடற்பாதி வளர்ப்புக்கு என தமிழகத்தில் தனி பூங்கா அமைக்கப்பட்டும்.சமூக மற்றும் உள் கட்டமைப்புகளை இந்தியா விரைவாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கிராமங்கள் அனைத்திற்கும் மின்சார வசதி அளிக்க புதிய திட்டம் தொடக்கம். உலகின் மிகப்பெரிய சுகாதார திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்.

இலங்கை தமிழர்கள் மீது மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. யாழ்ப்பாணம் சென்ற முதல் பிரதமர் என்ற பெருமை எனக்கு உண்டு. வளர்ச்சி பணி மூலம் இலங்கை தமிழர் பிரச்னையில் கவனம் செலுத்தி வருகிறோம். வடகிழக்கு இலங்கையில் குடிபெயர்ந்த தமிழர்களுக்க 50 ஆயிரம் வீடுகள் கட்டி தரப்ப்பட்டுள்ளது.

மலையக தமிழர்களுக்கு 4 ஆயிரம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ் சேவைக்கு இந்தியா உதவி செய்துள்ளது. சென்னை - யாழ்ப்பாணம் இடையே விமான போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா கட்டி கொடுத்த யாழ்ப்பாணம் கலாசார மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. இலங்கை தமிழர்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினையை இலங்கை அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். தமிழர்கள், சமத்துவம், கண்ணியத்துடன் வாழ்வதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளிக்கும். இலங்கைத் தமிழர்கள் சம உரிமை, மரியாதையோடு வாழ்வதை இந்திய அரசு தொடர்ந்து உறுதிப்படுத்தி வருகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்