சென்னை வந்த பிரதமர் மோடியுடன் பங்காரு அடிகளார் சந்திப்பு

By செய்திப்பிரிவு

சென்னை வந்த பிரதமர் மோடியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் பங்காரு அடிகளார் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.

பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க சென்னை வந்தார். காலையில் விமானம் மூலம் வந்த அவர், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் சென்னை அடையாறு ஐ.என்.எஸ் தளத்திற்குச் சென்றார்.

பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் நேரு உள் விளையாட்டரங்கம் வந்தடைந்தார். பிரதமர் வரும் வழி எங்கும் அதிமுக, பாஜக தொண்டர்கள் அவருக்குக் கொடி அசைத்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்புரையாற்றினார். அடுத்து முதல்வர் பழனிசாமி பேசினார். நலத்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துப் பேசினார்.

நிகழ்ச்சி முடிந்ததும் பின்னர் சென்னை வந்த பிரதமர் மோடியை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பீடத்தின் பங்காரு அடிகளார் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். இதுபோலவே ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி உள்ளிட்டோரும் பிரதமர் மோடியை சந்தித்து சிறிது நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்