நெல்லை-மும்பை இடையே வாரம் மூன்று நாள் சிறப்பு ரயில்: பிப்.27 முதல் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு

By செய்திப்பிரிவு

நெல்லையில் இருந்து மும்பை வரை ஏற்கனவே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

தற்போது கூடுதலாக சேலம், தர்மபுரி, ஹூப்ளி வழியாக மற்றும் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயிலை நெல்லையில் இருந்து மும்பைக்கு (தாதர்) இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி (வண்டி எண் 01021 ) தாதர் - நெல்லை வாரம் மும்முறை சிறப்பு ரயில் பிப்.27 முதல் சனி, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் இரவு 9.30 மணிக்குப் புறப்பட்டு திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11.40 மணிக்கு நெல்லைக்கு வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் (வண்டி எண் 01022) நெல்லை-தாதர் வாரம் மும்முறை சிறப்பு ரயில் மார்ச் 1 முதல் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் 3 மணிக்குப் புறப்பட்டு புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 5.30 மணிக்கு தாதர் சென்று சேரும்.

இந்த ரயில்கள் கல்யாண், புனே, சதாரா, கர்ட், சாங்கிலி, குடாட்சி, கட்பிரபா, பெல்ஹாம், லோன்டா, ஆழ்னவார், தார்வார், ஹூப்ளி, ஹவேரி, ராணிபென்னூர், ஹரிஹர், அரிசிகரே, திப்டூர், தும்குர், யஸ்வந்த்பூர், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்குப் படுக்கை வசதிப் பெட்டி, மூன்று குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், எட்டு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதிப் பெட்டி கள், மூன்று இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிப் பெட்டிகள், இரண்டு காப்பாளர் அறையுடன் கூடிய சரக்குப் பெட்டிகள் இணைக்கப்படும்.இந்த ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை இயக் கப்படும். இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம் என மதுரைக் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்