சிவகங்கை நகராட்சி எரிவாயு தகன மேடை புகைப்போக்கி உடைந்ததால், இறந்தவர்களின் உடல்களை எரிக் கும் போது வெளியேறும் புகை அருகே யுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் பரவுகிறது. இதனால் நோயாளிகள் சுவாசிப்பதில் சிரமப்படுகின்றனர்.
சிவகங்கையில் மானாமதுரை சாலை யில் 3 ஏக்கரில் எரிவாயு தகன மேடை அமைந்துள்ளது. இந்த தகன மேடை அரசு மருத்துவக் கல்லூரி அருகே அமைந்துள்ளது. இங்கு மாதத்துக்கு சராசரியாக 15 முதல் 20 உடல்கள் வரை எரிக்கப்படுகின்றன.
இதனால் உருவாகும் புகை 50 அடி உயர புகைப்போக்கி வழியே வெளியேறுகிறது. இந்த புகைப் போக்கி சில மாதங்களுக்கு முன்பு உடைந்தது. இதனால் உடல்களை எரிக்கும்போது வெளியேறும் புகை மானாமதுரை சாலை, இந்திராநகர், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதிகளில் பரவுகிறது. இதனால் நோயாளிகள், மக்கள் சிரமப்படுகின்றனர். மேலும் தகன மேடை வளாகத்தில் நகரில் சேகரமாகும் குப்பைகளைக் கொட்டுகின்றனர். அவை மலைபோல் தேங்கி கிடக்கிறது. இதனால் இறந்தோரை தகனம் செய்ய வருவோர் சிரமப்படுகின்றனர். இதனால் தகன மேடை வளாகம் புகைப்போக்கியைச் சீரமைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் கவுன்சிலர் சோனைமுத்து கூறியதாவது: புகைப்போக்கி 50 அடிக்கு மேலே இருந்தால் புகை கீழ்ப் பகுதிக்கு வராது. புகைப்போக்கி உடைந்தது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததை அடுத்து, தொங்கிய பகுதியை மட்டும் அகற்றினர். ஆனால் சீரமைக்கவில்லை. இதனால் மீண்டும் புகை முழுவதும் ஊருக்குள் பரவி வருகிறது என்றார். நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், புகைப்போக்கியை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வரு கிறோம் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
41 secs ago
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago