ஈரோடு ஓடையில் கொட்டப்பட்ட சாய மூட்டைகள்

By செய்திப்பிரிவு

ஈரோடு நகரில் உள்ள ஓடைகள், சாக்கடைகளில் திடக்கழிவு சாய மூட்டைகள் கொட்டப்பட்ட சம்பவம் குறித்து மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய, சலவை மற்றும் தோல் தொழிற்சாலைகளில் இருந்து, சுத்திகரிக்கப்படாத கழிவு நீர் சாக்கடைகள், ஓடைகளில் வெளியேற்றப்படுகிறது. இந்த கழிவு நீர் நேரடியாக காவிரி ஆற்றிலும், காலிங்கராயன் வாய்க்காலிலும் கலப்பதால், குடிநீர் மாசடைவதோடு, விளைநிலங்களும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வந்த சாயப்பட்டறைகளில் இருந்து குழாய்கள் அமைத்து காலிங்கராயன் கால்வாயில் கழிவு நீரை வெளியேற்றிய 30 ஆலைகள் கண்டுபிடிக்கப்பட்டு, சமீபத்தில் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில், ஈரோடு பிச்சைக்காரன் ஓடையில் சீனாங்காடு பாலம், தண்ணீர் பந்தல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாக்கடைகளில், சாய ஆலைகளில் பயன்படுத்தும் ரசாயன வண்ணப் பொடிகள், மூட்டை மூட்டையாக நேற்று அதிகாலை கொட்டப்பட்டு இருந்தது. மூட்டைகளில் இருந்த ரசாயனம் தண்ணீரில் கரைந்ததால், ஓடை மற்றும் சாக்கடை நீர் பல வண்ணங்களில் ஓடியது.

சாயப்பட்டறை திடக்கழிவுகள் சாக்கடை மற்றும் ஓடைகளில் கொட்டப்பட்டு இருப்பது குறித்து மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.ஈரோடு நகரில் சாயக்கழிவுகள் கலந்ததால், சாக்கடை நீர் வண்ணமயமாக ஓடியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்