திருப்பத்தூரில் கொள்ளையர்களை ஒரே நாளில் பிடித்த போலீஸாருக்கு பாராட்டு

By இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் 10 பவுன் தாலிச் சங்கலியை பறித்து சென்ற 5 பேரை ஒரே நாளில் கைது செய்த போலீஸாரை எஸ்.பி பாராட்டினார்.

திருப்பத்தூர் அருகே நாட்டார்மங்களத்தைச் சேர்ந்த பாண்டி மனைவி செங்காயி. இவர் பிப்.9-ம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்தார். அப்போது வீட்டின் பின்புறமாக வந்த 5 பேர் கத்தியை காட்டி மிரட்டி செங்காயி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் நகர் போலீஸார் வழக்கு பதிந்தனர். தொடர்ந்து டிஎஸ்பி பொன்ரகு தலைமையில் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, எஸ்ஐ சந்திரன் கொண்ட 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படையினர் விசாரணையில் இந்த கொள்ளையில் திருப்பத்தூர் நாட்டார்மங்கலம் குணசேகரன் (43), திருமங்கலத்தைச் சேர்ந்த முத்துக்குமார் (30), மதுரை வண்டியூரைச் சேர்ந்த மணிகண்டன் (28), அண்ணாநகரைச் சேர்ந்த ஆனந்த் (35), ஆனையூரைச் சேர்ந்த பூபதி (38) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். மேலும் ஒரே நாளில் அவர்களை கைது செய்த போலீஸாரை எஸ்பி ரோஹித்நாதன் பாராட்டினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

மேலும்