விருதுநகர் அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள ரத்தப் பரிசோதனைக் கருவிகளை அடித்து உடைத்த குடி நோயாளி

By இ.மணிகண்டன்

விருதுநகர் அரசு மருத்துவமனை ரத்தப் பரிசோதனை ஆய்வகத்தில் கருவிகள் அனைத்தையும் நோயாளி ஒருவர் அடித்து நொறுக்கினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் பாண்டி (38). மதுப் பழக்கத்தால் குடல் புண் ஏற்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த வாரம் சேர்க்கப்பட்டார்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கடந்த 8ம் தேதி விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த பாண்டி தப்பி ஓடி தலைமறைவானார். இதுபற்றி தகவல் அறிந்த பாண்டியன் நகர் போலீஸார் பல்வேறு இடங்களில் பாண்டியைத் தேடி வந்தனர்.

அப்போது விருதுநகர் பட்டேல் சாலையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித் திரிந்த பாண்டியை போலீஸார் பிடித்து வந்து அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டி விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள ரத்தப் பரிசோதனை ஆய்வகத்திற்கு நுழைந்து கதவுகளை அடைத்துக்கொண்டு அங்கிருந்த ரத்தப் பரிசோதனைக் கருவிகள், ரத்த அணுக்கள் எண்ணிக்கை கண்டறியும் கருவி, தைராய்டு கண்டறியும் கருவி, கணினி உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டார். இதனால் அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலை பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த பாண்டியன் நகர் போலீஸார் விரைந்து சென்று பாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு மருத்துவமனை ரத்தப் பரிசோதனை ஆய்வகத்தில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான கருவிகள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டதால் எந்தவித பரிசோதனைகளும் மேற்கொள்ள முடியாமல் ஆய்வக நுட்புனர்களும் நோயாளிகளுக்கு ரத்தப் பரிசோதனை செய்ய முடியாத காரணத்தால் உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் மருத்துவர்களும், சிகிச்சைப் பெற முடியாமல் நோயாளிகளும் தவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்