தேசிய நீர்வழிப் பாதை மூலம் நதிகள் இணைப்பு என்ற தலைப்பில் 2 நாள் மாநாடு சென்னை வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்தில் இன்றும், நாளையும் நடை பெறுகிறது.
இந்நிலையில் நதிகள் இணைப்பு குறித்து பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
நதிகள் இணைப்பு அவசியம் ஏன்?
உலக மக்கள் தொகையில் 16 சதவீதம் பேர் இந்தியாவில் வசிக்கின்றனர். ஆனால் உலகின் மொத்த நன்னீர் இருப்பில் 4 சதவீதம் மட் டுமே இந்தியாவில் உள்ளது. ஆண்டுக்கு சுமார் ஒன்றரை கோடி பேர் என மக்கள் தொகை அதிகரித்து வரும் சூழலில், இந்தியாவில் உணவு உற்பத்தியை பெருக்குவது கட்டாயம். அந்த வகையில் நீர் வளத்தை முறையாகப் பயன்படுத்துவதும், நதிகளை இணைப்பதும் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் அவசியம்.
நதிகள் இணைப்புத் திட்டம் நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறதே…?
ஆமாம். 1970-களில் நான் எம்.பி.யாக இருந்தபோது, இந்திரா காந்தி அமைச்சரவையில் கே.எல்.ராவ் அமைச்சராக இருந்தார். அவர் தான் இந்திய நதிகளை இணைப் பதற்கான வரைவுத் திட்டத்தை உருவாக்கினார். 1982-ம் ஆண்டு தேசிய நீர் மேம்பாட்டு முகவாண்மை உருவாக்கப்பட்டது ஒரு குறிப்பிடத் தக்க முன்னேற்றம் ஆகும். அதன் பின்னர் 1999-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நதிகள் இணைப் புக்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. அதற்குப் பிறகு இப்போதைய மத்திய அரசு நதிகள் இணைப்பில் ஆர்வம் காட்டுவதால் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் நிலைமை என்ன?
ஆண்டுக்கு 200 டி.எம்.சி. தண்ணீ ருக்காக கர்நாடகத்துக்கும் நமக் கும் பல ஆண்டுகளாக பிரச்சினை நீடிக்கிறது. எனினும் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சுமார் 150 டி.எம்.சி. மழை நீர் வீணாவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஏரிகள், குளங்கள், ஆறுகள், ஓடைகளைப் பாதுகாத்து பராமரிப் பதன் மூலம் பெருமளவு தண்ணீரை நாம் தேக்கி பயன்படுத்தலாம். மாநிலத்துக்குள்ளேயே ஓடும் நதி களை இணைப்பதால் மாநிலத்தின் பிற வறண்ட பகுதிகளுக்கு தண்ணீரை கொண்டு செல்லலாம்.
நதிகள் இணைப்பில் அண்டை மாநிலங்களுக்கு இடையே ஒத்தக் கருத்துகள் ஏற்படுவது அவசியம் அல்லவா?
ஆமாம். தமிழ்நாட்டில் ஆண்டு சராசரி மழை 900 முதல் 950 மி.மீ. மட்டுமே. ஆனால் கேரளத்தில் ஆண்டுக்கு 3 ஆயிரம் மி.மீ. மழை பொழிகிறது. எனினும் மிகப் பெரும்பகுதி நீர் மேற்கு நோக்கி அரபிக் கடலுக்கு சென்று விடுகிறது. அவ்வாறு கடலுக்குச் செல்லும் மழை நீரைத் தடுத்து மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதிக்கு கொண்டு வந்தால் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய 3 மாநிலங்களும் பெரும் பயன்பெறும்.
அதேபோல் கர்நாடகத்தில் மட் டும் ஆண்டுக்கு 2 ஆயிரம் டி.எம்.சி. தண்ணீர் அரபிக் கடலுக்கு செல்கிறது. அந்த தண்ணீரை தடுத்து கிழக்குப் பகுதிக்கு கொண்டு வந் தால் கர்நாடகம், தமிழ்நாடு, ஆந் திரம் ஆகிய 3 மாநிலங்களுக்கும் பெரும் பயன்கள் கிடைக்கும். பிரச்சினைகளை ஒதுக்கி வைத்து விட்டு ஒத்துழைப்பை அதிகரித்தால் இந்த 4 மாநிலங்களுமே அதிவேக மாக வளர்ச்சி பெறுவது நிச்சயம்.
நதிகள் இணைப்பு கனவாகவே தொடர காரணம் என்ன?
இந்தத் திட்டத்தை யாரும் புறக் கணிக்கவில்லை. ஆனால் போதிய முக்கியத்துவம் கொடுக்காததால் வெறும் பேச்சாகவே தொடர்கிறது.
இப்படியே பேச்சாகவேத்தான் தொட ருமா?
நிச்சயமாக இல்லை. காலச் சூழல் மாறும். இப்போது பல மாநிலங் கள் நதிநீர் இணைப்பு பற்றி தீவிர மாக பேசத் தொடங்கியுள்ளன. ஆந்திராவில் கோதாவரி கிருஷ்ணா நதிகளை இணைப்பதற் கான நடவடிக்கைகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி விட்டார்.
நீங்கள் நடத்தும் மாநாடு பற்றி…?
நதிகளை இணைப்பது பற்றி பல்வேறு துறைகளின் நிபுணர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் விவாதிக்கிறார் கள். மாநாட்டில் விவாதிக்கப்படும் கருத்துகளைக் கொண்டு ஒரு கொள்கை பிரகடனம் வெளியிட உள்ளோம். அதை மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசு களிடமும் அளிக்க உள்ளோம். இது தவிர தென் மாநிலங்களைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் திரட்டி ஒரு மாநாடு நடத்த உள்ளோம்.
இதுபோன்ற நடவடிக்கைகளால் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தமுடியும்?
நதிகள் இணைப்பில் தற்போதைய மத்திய அரசு மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. ஆந்திரம் உள்ளிட்ட பல மாநில அரசுகளும் இந்தத் திட்டத்தில் தீவிரமாக உள்ளன. இந்த சூழலில் நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து பொதுநல அமைப்பு களும் நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம் தந்தால் திட்டம் விரைவுபடுத்தப்படும். அரசியல் கட்சிகளின் வேலைத் திட்டத்தில் நதிகள் இணைப்புக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். அத்தகைய முக்கியத்துவமும், முன்னுரிமையும் கிடைக்கச் செய்ய எங்களது இது போன்ற நடவடிக்கைகள் பெரும் தூண்டுகோலாக இருக்கும் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago