சென்னையில் 2 பெண்கள் கொலை சம்பவம்: தனியாக இருக்கும் பெண்கள் செய்ய வேண்டியது என்ன?

By செய்திப்பிரிவு

சென்னையில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து சமீபத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. சென்னை எழும்பூரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த வந்த 83 வயது மூதாட்டி கொலை செய்யப்பட்டதும், முகப்பேரைச் சேர்ந்த 65 வயதானவர் காரில் சென்றுகொண்டிருக்கும்போது டிரைவரால் கொல்லப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இவற்றை தவிர்க்க பெண்கள் சில தற்காப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் செம்மலர் கூறுகையில், “இப் போது எல்லோரும் பேஸ்புக்கில் மட்டுமே நண்பர்களை தேடுகிறார் கள். வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள், தங்களது பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களின் தொலைபேசி எண் களையும் அருகில் உள்ள காவல் நிலையத்தின் எண் களையும் தங்களது மொபைலில் பதிவு செய்து கொண்டு, அதை ’ஸ்பீட் டயல்’ என்ற வரிசையில் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது ஒரே ஒரு பட்டனை அழுத்தினால் அந்த நபருக்கு உங்களது மொபை லிலிருந்து அழைப்பு அனுப்பப் படும்.

இதே போன்று தங்களுக்கு நெருக்கமானவர்களின் எண்களை யும் ஸ்பீட் டயலில் சேர்த்துக் கொள்ளலாம். வயதானவர்கள், தங்களுக்கு நம்பிக்கையானவர் களின் மூலம் அல்லது ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தின் மூலம் ஒரு உதவியாளரை தங்களுடன் தங்க வைத்துக் கொள்ளலாம்” என்றார்.

தொழில்நுட்பம் எப்படி பெண் களின் பாதுகாப்புக்கு உதவும் என்பது குறித்து சென்னையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் பணி புரியும் நந்தினி கூறுகையில், “ஸ்மார்ட் போன் வைத்திருப் பவர்கள் தங்களது செல் போனில் அவசரகால எச்சரிக்கை செயலிகளை (emergency alert app) பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். தாங்கள் ஆபத்தில் இருக்கும்போது ஒரு பட்டனை அழுத்தினாலே, உங்கள் நெருங்கிய நண்பருக்கு குறுஞ் செய்தி அல்லது அழைப்பு, தாங்கள் இருக்கும் இடத்தை பற்றிய தகவல், உடனடியாக காப் பாற்றுங்கள் என்று உங்கள் மொபைலிலிருந்து காவல்துறை அல்லது தாங்கள் விரும்பும் நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப் பப்படும். வெளியில் செல்லும் போது தங்களது மொபைலில் சார்ஜ் இருக்கிறதா, குறைந்தபட்ச பேலன்ஸ் இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்வது அவசியம்” என்றார்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களின் எண்களை http://www.tnpolice.gov.in/women_help.html என்ற இணையதளத்தில் பெறலாம். அது தவிர 1091 என்ற பெண்களுக்கான அவசர உதவி எண்ணையும் ஆபத்து நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்