2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை தானியங்கள் ஏற்றுமதியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2020-21 நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில் இந்தியாவின் தானியங்கள் (அரிசி, கோதுமை மற்றும் இதர தானியங்கள்) ஏற்றுமதி நல்ல முன்னேற்றத்தைக் கண்டது.
முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டப்பட்ட வருவாயான ரூ 32,591 கோடியுடன் ($ 4581 மில்லியன்) ஒப்பிடும் போது, 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூபாய் மதிப்பில் 52.90 சதவீதமும், அமெரிக்க டாலர் மதிப்பில் 45.81 சதவீதமும் உயர்ந்து, ரூ 49,832 கோடி என்னும் அளவை இந்தியாவின் தானிய ஏற்றுமதி தொட்டது.
2020-21-ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், பாசுமதி அல்லாத அரிசியின் ஏற்றுமதியும் குறிப்பிடத்தகுந்த அளவு உயர்ந்திருந்தது. 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை ரூ 22,856 கோடி ($ 3068 மில்லியன்) ஆக இது இருந்தது. 2019-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ 10,268 கோடியாக ($ 1448 மில்லியன்) ஆக இருந்தது.
2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை, கோதுமை ஏற்றுமதி ரூ 1,870 கோடி ($ 252 மில்லியன்) என்னும் அளவில் இருந்தது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இது ரூ 336 கோடியாக ($ 48 மில்லியன்) இருந்தது. டாலர் மதிப்பில் 431.10 சதவீதமும், ரூபாய் மதிப்பில் 456.41 சதவீதமும் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago