உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் நிதியுதவி; முதல்வர் பழனிசாமி உத்தரவு

By செய்திப்பிரிவு

உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 10) வெளியிட்ட அறிக்கை:

"அரியலூர் மாவட்டம், தா.பழூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரா.ரவி;

செங்கல்பட்டு மாவட்டம், பாலூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கு. சிவசங்கரன்;

சென்னை பெருநகர காவல், குன்றத்தூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த வே. பாண்டிமுனி;

இ-1 மயிலாப்பூர் காவல் நிலைய போக்குவரத்து பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த ச. அருண்காந்தி;

புனித தோமையர்மலை ஆயுதப்படை பிரிவில் பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜே. சத்தியலட்சுமி;

எஸ்-2 விமான நிலைய காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த கோ. ரவி;

நுண்ணறிவுப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரா. ரமேஷ் பாபு;

சென்னை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை 2 ஆம் அணியில் பெண் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஜே. துர்கா;

சென்னை-ஆவடி, தமிழ்நாடு சிறப்பு காவல் படை பயிற்சி மையத்தின் வாத்தியக்குழு பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த சா. அருள்தாஸ்;

கோயம்புத்தூர் மாநகரம், வி.ஹெச்.சாலை காவல் நிலைய குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ச. அன்பழகன்;

தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஆ. வெங்கடராமன்;

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ச. அருணாச்சலம்;

பழனி நகர காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மு. தங்கவேலு;

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ர. பழனி;

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த மு. இளையாபிள்ளை;

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கு. ராஜேந்திரன்;

நாமக்கல் மாவட்டம், வேலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த பொ. குழந்தைவேல்;

பெரம்பலூர் மாவட்டம், மருவத்தூர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சாந்தி;

புதுக்கோட்டை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சி. மாரிமுத்து;

சேலம் மாவட்டம், தொளசம்பட்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கோ. கனிபிரசாத்;

சேலம் மாநகரம், சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஐ. வனிதா;

சிவகங்கை மாவட்ட ஆயுதப்படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மு. பாலகுரு;

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சு. கண்ணன்; புளியரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ச. வேலையா;

நீலகிரி மாவட்டம், ஆயுதப்படையில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஏ. கருணாகரன்;

தேனி மாவட்டம், தேவாரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சி. வெற்றிச்செல்வன்; சின்னமனூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பி. சோமு;

திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகப் பணிபுரிந்து வந்த கவிதா;

திருவாரூர் மாவட்டம், களப்பால் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ச. முருகேசன்;

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காவல் நிலைய போக்குவரத்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த மு. மூர்த்தி;

திருச்சி மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் பாதுகாவலராகப் பணிபுரிந்து வந்த ஆ. முத்துகுமார்;

திருநெல்வேலி மாவட்டம், மாஞ்சோலை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த அ. சுப்பிரமணியன்;

திருப்பூர் மாநகரம், திருமுருகன்பூண்டி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சி. விக்டர்;

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஒ. சத்தியமூர்த்தி;

வேலூர் மாவட்டம், சேவூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 15 ஆம் அணியில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஆர். அண்ணாதுரை;

விழுப்புரம் மாவட்டம், மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ஜி. சிவக்குமார்;

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் படை 11 ஆம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த கு. முத்தையா;

ஆகியோர் உடல் நலக் குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

அரியலூர் மாவட்டம், வெங்கனூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த க. மதியழகன்;

சென்னை தலைமைச் செயலக சுற்றுக்காவல் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சா. பிரதீஷ்;

சென்னை பெருநகர காவல், ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த அ. ராம்கி;

சேலையூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த தேவராஜ்;

ஆயுதப்படை, முதலாம் அணியில் பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த பவித்ரா;

சென்னை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை 2 ஆம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த எம். இளங்கோவன்;

3 ஆம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த சா. மருதுபாண்டி;

13 ஆம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த செ. தானேஷ்;

கடலூர் மாவட்டம், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரா. ஞானசேகரன்;

தருமபுரி மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வந்த மா. செந்தில்;

கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7 ஆம் அணியில் காவலராகப் பணிபுரிந்து வந்த ந. ரவிவர்மன்;

மதுரை மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 6 ஆம் அணியில் பெண் காவலராகப் பணிபுரிந்து வந்த க. கார்த்தியாயினி;

சிலைமான் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சீ. செல்வம்;

சேலம் மாநகரம், சி1 அம்மாபேட்டை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ரா. சக்திவேல்;

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த எ. மோசஸ் மோகன்ராஜ்;

தேனி மாவட்டம், தேனி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த ஏ. முருகன்;

திருநெல்வேலி மாவட்டம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை 12 ஆம் அணியில் (மணிமுத்தாறு) காவலராகப் பணிபுரிந்து வந்த ச. அசோக்குமார்;

திருச்சி மாநகரம், பாலக்கரை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ஆர். தமிழ்ச்செல்வன்;

திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்த ம. அண்ணாதுரை;

விருதுநகர் மாவட்டம், மம்சாபுரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த முருகன்;

ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த மிகுந்த வேதனை அடைந்தேன்.

உடல் நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்