தூத்துக்குடி, தஞ்சாவூர் மாவட்டங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான 24 சொத்துகள் அரசுடமை

By செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், சசிகலாவின் உறவினர்களான வி.என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகியோருக்கு சொந்தமாகதமிழகம் முழுவதும் உள்ள சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, தூத்துக்குடிமற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இவர்களுக்கு சொந்தமான24 சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, தூத்துக்குடி ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:

தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம் வட்டத்துக்கு உட்பட்ட சேரகுளம் வருவாய் கிராமத்தில், 580 ஏக்கர் பரப்பளவிலான 11சொத்துகள், வல்லகுளம் வருவாய் கிராமத்தில் சுமார் 270 ஏக்கர் பரப்பில் 5 சொத்துகள், கால்வாய் கிராமத்தில் சுமார் 62 ஏக்கர் பரப்பில் 2 சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. இதேபோல், சாத்தான்குளம் வட்டம் மீரான்குளம் கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பிலான 5 சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

இந்த சொத்துகள் அனைத்தும் ‘ரிவர்வே அக்ரோ புரோடக்ட்ஸ் (பி) லிமிடெட்’ என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தநிறுவனத்தில் வி.என்.சுதாகரன், ஜெ.இளவரசி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ளனர். இந்த சொத்துகள் அனைத்தும் வடசென்னை பதிவாளர் அலுவலகத்தில் 17.11.1994, 22.11.1994, 06.01.1995, 21.02.1995 ஆகியதேதிகளில் பதிவு செய்யப்பட்டுஉள்ளன.

உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க இந்த சொத்துகளை பறிமுதல் செய்து, தமிழ்நாடு அரசின்சொத்து என, பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாய் (வாடகை, நிலுவை வாடகை உட்பட) அனைத்தும் தமிழக அரசுக்கு பாத்தியப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல் தஞ்சாவூரில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமாக உள்ள 26,540 சதுர அடி காலிமனை அரசுடைமை ஆக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேற்று தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் உள்ள காலி மனை 1995-ம் ஆண்டு ரூ.11 லட்சத்துக்கு வாங்கப்பட்டது. தற்போது இந்த இடத்தின் மதிப்பு ரூ.10.61 கோடி எனக் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்