புதுச்சேரி முதல்வர் நாராய ணசாமிக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையில் கடும் மோதல் போக்கு இருந்து வருகிறது.
'யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் தனக்குத்தான் அதிகாரம் என கிரண்பேடி, அரசின்அன்றாட நிகழ்வுகளில் தலையிட்டு வருவதுடன், மக்கள் நலத்திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்' என்று நாராயணசாமி, அமைச்சர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆளுநர் கிரண்பேடி மீது பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் குடியரசுத் தலைவரை சந்தித்து புகார் செய்யப் போவதாக நாராயணசாமி கூறினார். இதற்காக கடந்த மாதம் டெல்லிசென்றார். ஆனால் குடியரசு தின விழா பணிகளில் குடியரசுத் தலைவர் ஈடுபட்டிருந்ததால் சந்திக்க முடியவில்லை. நாராயணசாமி புதுவைக்கு திரும்பினர்.
இந்நிலையில் இன்று (பிப். 10) காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முதல்வர் நாராயணசாமி நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார். புதுவை மக்களிடம் காங்கிரஸ் கூட்டணி சார்பில் பெறப்பட்ட கையெழுத்து இயக்கபிரதிகளை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்து, அரசுக்குகிரண்பேடி தரும் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்து ரைக்கிறார். இச்சந்திப்பில் அமைச்சர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago