உயர் நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் இனி இணையதளத்தில் கிடைக்கும்: புதிய வசதி விரைவில் அறிமுகம்

By வி.தேவதாசன்

சென்னை உயர் நீதிமன்றம் தினந்தோறும் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளும் இனி இணையதளத்தில் கிடைக்கும்.

விரைவில் அறிமுகப்படுத்தப் பட உள்ள இந்த வசதியால் வழக்கறிஞர்களும், வழக்காட வரும் பொதுமக்களும் பெரிதும் பயனடைவார்கள்.

உச்ச நீதிமன்றம் ஒவ்வொரு வழக்கிலும் பிறப்பிக்கும் இறுதி உத்தரவுகள் மட்டுமின்றி, இடைக்கால உத்தரவுகள் கூட அன்றைய தினமே இணைய தளத்தில் வெளியிடப்படுகிறது. இதனால் தங்கள் வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்த ரவை அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பொதுமக்களும், வழக்கறிஞர்களும் தெரிந்து கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உடனடியாக திட்டமிட முடிகிறது.

ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தைப் பொருத்தமட்டில் இறுதி உத்தரவுகள் மட்டுமே தற்போது இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. அதுவும் கூட எல்லா வழக்குகளின் இறுதி உத்தரவுகளும் இணைய தளத்தில் கிடைக்காது.

குறைவான வழக்குகளில்தான் தீர்ப்பு கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காட வரும் பொதுமக்கள் தங்கள் வழக்கில் பிறப்பிக்கப்படும் உத்தரவை உடனடியாக அறிய முடியாத நிலை இருந்து வருகிறது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் போலவே சென்னை உயர் நீதிமன்றத்திலும் அனைத்து உத்தரவுகளையும் இணையதளத்தில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. இறுதி உத்தரவுகள் மட்டுமின்றி இடைக்கால உத்தரவுகளும் இனி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளன.

நீதிமன்றம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளும் இணையதளத்தில் பொது மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி மிகவும் ஆர்வமாகவும், தீவிரமாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து உயர் நீதிமன்றப் பணிகளை கணினி மயப்படுத்துவதற்கான நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் தலைமை யிலான குழு, அனைத்து உத்தரவு களையும் இணையதளத்தில் வெளியிடு வதற்கான தொழில் நுட்பப் பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவுகளை பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது பரிசோதனை முறையில் நடைபெற்று வருகின்றன. பரிசோதனை முறையின் போது தெரியவரும் குறைபாடுகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு, விரைவிலேயே பொதுமக்களின் பயன்பாட்டுக்காக நீதிமன்ற உத்தரவுகள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.

“இந்த புதிய வசதி வழக் கறிஞர்களுக்கும், பொதுமக் களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என்கிறார் வழக்கறிஞர் பி.விஜேந்திரன்.

“நீதிமன்ற உத்தரவின் நகல் உடனடியாகக் கிடைக்காமலும், உத்தரவில் கூறப்பட்டுள்ள விவரங் களை முழுமையாக அறிய முடியாமலும் பாதிக்கப்படும் பொதுமக்களும், வழக்கறிஞர்களும் இந்த புதிய வசதியால் பயனடைவார்கள். ஜாமீன் கோரும் வழக்குகள் உள்பட சில அவசர வழக்குகளில் இணையதளத்தில் கிடைக்கும் உத்தரவின் நகலைக் கொண்டே நிவாரணம் பெறலாம் என்ற நிலை ஏற்படுமானால், வழக்காடுவோர் மேலும் பெரும் பயன் அடைவார்கள்” என்றார் விஜேந்திரன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்