திருச்சி மாநகரில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் தொடரும் விபத்துகள்: போராட்டம் நடத்த சமூக ஆர்வலர்கள் முடிவு அ.வேலுச்சாமி

By செய்திப்பிரிவு

திருச்சி மாநகரில் சாலைகளில் திரியும் கால்நடைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் போராட்டம் நடத்தவும், பொது நல வழக்கு தொடரவும் சமூக ஆர்வலர்கள் முடிவு செய்துள்ளனர்.

திருச்சி மாநகரிலுள்ள முக்கிய சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங் காங்கே கால்நடைகள் திரிவது வழக்கமாகிவிட்டது. இவற்றால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கிக் கொள் வதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும் அடிக்கடி நிகழ்கிறது.

இதைத் தவிர்க்க சாலைகளில் மாடுகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடம் காவல்துறை யினரும், பல்வேறு அமைப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின் றனர். ஆனாலும் மாநகராட்சி அதிகாரிகள் இதைக் கண்டு கொள்வதில்லை.

இந்த சூழலில், சாலைகளில் நடமாடக்கூடிய மாடுகளால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட மாட்டின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. மேலும், அந்த மாடுகளின் உரிமையாளர்களை கைது செய்யப் போவதாகவும் அறிவித்தனர். ஆனால் அதற்குப் பிறகும் சாலைகளில் மாடுகளின் நடமாட்டம் குறையவில்லை.

இந்நிலையில், திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை ஊழி யரும், தொழிற்சங்க நிர்வாகி யுமான சரவணன் கடந்த 29-ம் தேதி தனது நண்பரான னிவாசலுவுடன் துப்பாக்கி தொழிற்சாலையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். மத்திய சிறை நுழைவு வாயில் பகுதியில் வந்த போது, சாலையின் குறுக்கே மிரண்டு ஓடிய மாட்டின் மீது இருசக்கர வாகனம் மோதியது. இதில், வாகனத்தை ஓட்டிய னிவாசலு லேசான காயங்களுடன் தப்பினார். பின்னால் அமர்ந்திருந்த சரவணன் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதுகுறித்து தெற்கு போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

எனவே விபத்தில் தொடர்பு டைய மாட்டின் உரிமையாளர் மீதும், அப்பகுதிக்கான மாந கராட்சி அதிகாரிகள் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகர வளர்ச்சிக் குழு (டைட்ஸ்) நிர்வாக உறுப்பினரான கே.ஷ்யாம்சுந்தர் கூறும்போது, ‘‘சாலையில் திரியும் மாடுகளால் விபத்துகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதுதொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமு றை முறையிட்டும் பலனில்லை. எனவே, பல்வேறு அமைப்புகளு டன் இணைந்து போராட்டங்களை முன்னெடுப்பது குறித்து ஆலோ சித்து வருகிறோம்’’ என்றார்.

சமூக ஆர்வலரும், ஏற்றுமதியா ளருமான சையது கூறும்போது, ‘‘இந்த விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் முறையான நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டேன். எனவே, இது தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர உள்ளேன்’' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்