திருச்சி தேசிய நெடுஞ்சாலயில் மரக்கன்றுகள் நடக்கோரிய மனுவுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த அல்போன்ஸ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
”திருச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்காக சாலையின் இரு பக்கங்களிலும் இருந்த ஆயிரக்கணக்கான புளியமரங்கள், வேப்ப மரங்கள் வெட்டப்பட்டன.
இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது வெட்டப்படும் ஒவ்வொரு மரத்துக்கும் 5 மரக்கன்றுகள் வீதம் நடப்பட்டு பராமரிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.
ஆனால் நான்கு வழிச்சாலை பணி முடிந்து 9 ஆண்டுகள் முடிந்தும் இதுவரை ஒரு மரக்கன்று கூட நடவில்லை. இதனால் மணப்பாறை முதல் வையம்பட்டி வரை சாலையின் இரு பக்கங்களிலும் மரக்கன்றும் நடக்கோரி 2019 முதல் மனு அளித்து வருகிறோம்.
இதுவரை மரக்கன்று நடவில்லை. எனவே, மணப்பாறை முதல் வையம்பட்டி வரை தேசிய நெடுஞ்சாலை 45-ல் மரக்கன்று நட உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனர், திருச்சி மாவட்ட வன அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 8-க்கு ஒத்திவைத்தது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago