மதுரை அரசு மருத்துவமனையில் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் நிதியுதவியுடன் ரூ.121.20 கோடியில் 6 அடுக்கு மாடியுடன் கூடிய 22 நவீன வசதிகளுடன் கூடிய அறுவை சிகிச்சை அரங்கம் கட்டப்படுகிறது.
இதற்கான பணிகளை இன்று முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார். மதுரையில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார் கலந்து கொண்டனர்.
மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் மாணவிகள் தங்கும் விடுதி எதிரே அமைந்துள்ள ஆடிட்டோரியம், அதன் அருகே அமைந்துள்ள 1, 2 மற்றும் 3 அறுவை சிகிச்சை அரங்குகள் மற்றும் சலவைக் கூடம் ஆகிய கட்டிடத்தை இடித்துவிட்டு பிரம்மாண்ட நவீன அறுவை சிகிச்சை அரங்குகள் கட்டுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மொத்தம் 6 அடுக்கு மாடியுடன் கூடிய இந்தக் கட்டிடத்தில் 22 நவீன சிகிச்சை அரங்குகள் கட்டப்படுகின்றன. தற்போதே சென்னைக்கு இணையாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பல்வேறு நவீன ஹைடெக் சிகிச்சை கருவிகள் உள்ளன.
» நெல்லையில் காவல் நிலையம்முன் நாட்டு வெடிகுண்டு வீசிய வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்
தற்போது ஜப்பான் நாட்டின் உதவியுடன் கட்டப்படும் இந்த புதிய மருத்துவ கட்டிடமும், சிகிச்சை அரங்குகளும் வந்தப்பிறகு மதுரை அரசு மருத்துவமனையில் அனைத்து சிகிச்சை வசதிகளும் சென்னைக்கு இணையாகக் கிடைக்கும் என மருத்துவமனை டீன் சங்குமணி தெரிவித்தார்.
புதிய கட்டிடப்பணியை முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் இருந்து காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார் ஆகியோர் இந்த புதிய கட்டுமானப்பணிக்கான பூமி பூஜைகளைத் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் அன்பழகன், எம்எல்ஏ சரவணன், டீன் சங்குமணி மற்றும் மருத்வத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago