செல்போன் மூலமாக கடன் வழங்கும் சட்டவிரோத செயலிகளுக்கு தடை விதிக்கக்கோரிய மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
செல்போன் வழியாக கடன் வழங்கும் 50-க்கும் மேற்பட்ட செயலிகள் செயல்பாட்டில் உள்ளன.
இந்த செயலிகள் எந்த சட்ட திட்டங்களையும் பின்பற்றாமலும், ரிசர்வ் வங்கி அனுமதி பெறாமலும் செயல்படுகின்றன. செல்போன் செயலி வழியாக கடன் பெறுவோரிடம் அதிக வட்டி வசூலிக்கப்படுகிறது.
கடனை சரியாக திரும்ப செலுத்தாவிட்டால் கடன் பெற்றவர்களின் புகைப்படங்களை வாட்ஸ்அப் வழியாக செயலில் உள்ள பிற உறுப்பினர்களுக்கு பகிர்வது, செல்போனில் தொடர்பு கொண்டு தவறாக பேசுவது, மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் கடன் பெற்ற பலர் தற்கொலை செய்யும் மனநிலைக்கு தள்ளப்படுகின்றனர்.
கடன் வழங்கும் பல செயலிகள் சீனா நாட்டுடன் மறைமுகமாக கூட்டு வைத்துள்ளது. இதனால் செல்போன் மூலம் கடன் வழங்கும் செயலிகள் குறித்து மத்திய அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
சட்டவிரோதமாக கடன் வழங்கும் செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு சார்பில் அவகாசம் கோரப்பட்டதால், அதற்கு அவகாசம் வழங்கி விசாரணையை மார்ச் 1-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
10 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago