திண்டிவனம் அருகே சாலையோர மரத்தில் கார் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே தலவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன்கள் குருநாதன் (54), சென்னை ரயில்வே துறையில் வேலை செய்து வருகிறார், செந்தில்நாதன்(50), இவர் சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்து வருகிறார். செந்தில்நாதன். இவரது மனைவி இந்துமதி (40), இவர் சென்னை சேப்பாக்கத்தில் வேளாண் அலுவலராக உள்ளார். செந்தில்நாதன் மகன் முகில்(16), 11-ம் வகுப்புப் படித்து வருகிறார். இவர்கள் சென்னை, மேடவாக்கம், விமலா நகரில் வசித்துவந்தனர்.
இவர்கள் அனைவரும் கள்ளக்குறிச்சியில் உறவினரின் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று காரில் சென்றுள்ளனர். மீண்டும் சென்னைக்குச் செல்வதற்காக இன்று காலையில் ஒரே காரில் 4 பேரும் சென்னை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். அப்போது மதியம் 12.30 மணி அளவில் பாதிரி கிராமத்தில் சாலையோரம் இருந்த மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் குருநாதன், செந்தில்நாதன், இந்துமதி, ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த முகிலனை ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஒலக்கூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
» சசிகலா இன்னும் அதிமுகவில்தான் இருக்கிறார்: வழக்கறிஞர் உறுதி
» சசிகலா வரவேற்பு நிகழ்ச்சியின் போது பட்டாசு வெடித்ததில் தீப்பிடித்து எரிந்த கார்கள்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago