கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து வழக்கமான விமானசேவைகள் ரத்து செய்யப்பட்டு, சிறப்பு விமானங்கள் மட்டும் திருச்சிக்கு இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமானங்களில் வரக்கூடிய பயணிகள், தங்களுக்கு கரோனா பாதிப்பு இல்லை என மருத்துவச் சான்றிதழ் பெற்றுவர வேண்டும்.
இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று காலை 169 பயணிகளுடன் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளுக்கு விமானநிலைய மருத்துவக் குழுவினர், வழக்கமான மருத்துவப் பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொண்டபோது, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் பயணி ஒருவரிடம் இருந்த சான்றிதழில், அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த மருத்துவக்குழுவினர் உடனடியாக அப்பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமை வார்டில் சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து, அந்த விமானத்தில் வந்த மற்ற பயணிகளுக்கும், அவரை கையாண்ட விமானநிலைய பணியாளர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், பல பயணிகள் விமானநிலையத்திலிருந்து சென்றுவிட்டதால், அவர்களை வீடு வீடாக தேடிச் சென்று கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
ஏர் இந்தியா மீது நடவடிக்கை?
இதுகுறித்து திருச்சி விமானநிலைய இயக்குநர் எஸ்.தர்மராஜூவிடம் கேட்டபோது, ‘‘கடந்த வாரம் இதேபோல கரோனா பாதித்த ஒரு பயணியை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருச்சிக்கு அழைத்து வந்திருந்தது. அப்போது அந்நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
தற்போது அதேபோல மீண்டும் கவனக் குறைவாக ஒரு பயணியை அழைத்து வந்துள்ள நிலையில், அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக நாளை மீண்டும் ஒரு கடிதம் அனுப்பப்பட உள்ளது’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago