சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை மக்கள் புறக்கணிப்பர்: மாநில பாஜக துணைத் தலைவர் கருத்து

By செய்திப்பிரிவு

பாஜக இளைஞரணி சார்பில் திருப்பூரில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. இதன் இறுதிபோட்டி மற்றும் பரிசளிப்பு விழாஅய்யம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினரான மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, செய்தியாளர்களிடம் கூறும்போது, "தமிழக முதல்வர் அறிவித்த விவசாய பயிர்க்கடன் தள்ளுபடியானது, கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளையும் சென்றடையும்.

மாவட்ட வாரியாக விவசாயிகளை முதல்வர் பட்டியலிட்டுள்ளார். எனவே, இந்த கடன் தள்ளுபடி அதிமுகவில் இருப்பவர்களை மட்டுமே சென்றடையும் என்று திமுக மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி பேசுவது அரசியலே. தேர்தலுக்கு முன்பு ஏதாவது பேச வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு பேசி வருகிறார்.

வேல் யாத்திரை தமிழகத்தில் இந்து மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முருக கடவுளின் வேலை கையில் எடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்துக்களை இழிவாகப் பேசிய திருமாவளவன் ஆகியோரும் வேலை கையில் எடுத்துள்ளனர். இதை ஒருபோதும் மக்கள் நம்பமாட்டார்கள்.

திமுக தொடர்ந்து இந்துக்களை அவமானப்படுத்தி வருகிறது. இந்து விரோத திமுகவை சட்டப்பேரவைத் தேர்தலில் நிச்சயம் மக்கள் புறக்கணிப்பார்கள். தேர்தலுக்காக கோயிலுக்குகூட சென்று ஸ்டாலின் வழிபடலாம். ஆனால், மக்கள் அதை நம்பமாட்டார்கள்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்