திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே உள்ள சிட்டிலரையை அடுத்த தாதம்பட்டியைச் சேர்ந்தவர் மணி மகன்பிரசாந்த்(27). இவர் கடந்த 2018-ல் 16 வயது சிறுமியை கடத்திச் சென்றதாக ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் போலீஸார் பிரசாந்த்தை தேடி வந்த நிலையில், அவர் அப்பெண்ணை திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அங்குசென்று பிரசாந்தை அழைத்து வந்து, ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் வைத்து நேற்று விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது, பிரசாந்த் தப்பிக்க முயற்சித்தபோது, காவல்நிலையத்தின் மாடியிலிருந்து தடுமாறி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை போலீஸார் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பிரசாந்த் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்துஅவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நபர் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக அப்பகுதி மக்களிடத்தில் தகவல்கள் பரவியது. இதையடுத்து, திருச்சி சரக டிஐஜி ஆனிவிஜயா, எஸ்.பி செந்தில்குமார்(பொ) உள்ளிட்டோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘2018-ல் பிரசாந்த் மீது ஜம்புநாதபுரம் காவல்நிலையத்தில் ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், கடத்தப்பட்ட நபர் சிறுமி என்பதால் இதனை முசிறிஅனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்து போக்ஸோ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக பிரசாந்தைஜம்புநாதபுரம் காவல்நிலை யத்துக்கு அழைத்து வந்து முசிறி மகளிர் காவல் ஆய் வாளர் லட்சுமி விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அப்போதுதிடீரென பிரசாந்த் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, அவர் தடுமாறி விழுந்து காயமடைந்து இறந்துவிட்டார். பிரேதபரிசோதனை அறிக்கையில் உண்மை தெரியவரும்’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
7 hours ago