தமிழகத்தில் பொந்தன்புளி மரங்கள் மெல்ல மெல்ல அழிந்து வருவதால், அவற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீரையாகச் சமைத்து உண்ணக் கூடிய இலைகள், ருசிமிக்க பானம் தரக்கூடிய கனி, காகிதம், கயிறு தயாரிக்கப் பயன்படக்கூடிய பட் டைகள், ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளக் கூடிய அடிமரம், பல்வேறு மருத்துவப் பயன்பாடுகள் என பல மகத்துவங்களை உள்ளடக்கியது பொந்தன்புளி மரங்கள்.
ஆப்ரிக்க பாலை நிலங்களில், முதன்முதலாக 17-ம் நூற்றாண்டு இறுதியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மைக்கேல் அடன்சன் என்னும் தாவரவியலாளர் பதிவு செய்ததால், அடன்சோனியா டிஜிடேட்டா (Adansonia Digitata) என்று தாவரவியல் பெயர் இதற்கு சூட்டப்பட் டது. ஆங்கிலத்தில் போபாப் (baobab) என்று அழைக்கப்படும் பொந்தன்புளி மரங்களுக்கு ஆனைப்புளி, பெருக்கமரம் என்றும் தமிழில் பெயர்கள் உண்டு.
பொந்தன்புளி மரங்களின் பிறப் பிடம் ஆப்ரிக்கா, மடகாஸ்கர் மற்றும் அரேபியா தீபகற்பம் ஆகும். இதில் 8 இனங்கள் உள்ளன. ஆப்ரிக்காவில் தங்கி பல்வேறு ஆய்வுகளை நடத்திய புவியியலா ளர் டேவிட் லிவிங்ஸ்டன், பொந் தன்புளி மரங்களை உலகின் எட்டா வது அதிசயம் என வர்ணித்தார்.
தமிழகத்தில் பொந்தன்புளி
தமிழகம் மற்றும் இலங்கையை ஆண்ட மன்னர்கள் அரேபிய தீபகற்பத்தில் இருந்து குதிரை களை இறக்குமதி செய்து குதிரை களுக்கு போர்ப்பயிற்சி வழங்க, வாணிபத்துக்காக வந்த அரேபியர் களை நியமித்து, குதிரைப்படைத் தலைவர்களாகவும் ஆக்கியுள்ள னர். குதிரைகளுக்கு உணவாக அரேபியர்கள் பொந்தன்புளி மரத்தின் இலைகள், பூக்கள் மற்றும் கொட்டைகளை கொடுப்பார்கள்.
இதனால் தமிழகம் மற்றும் இலங்கைக்கு அரேபியர்களின் மூலமாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பொந்தன்புளி மரங்கள் வந்து சேர்ந்தன. இந்த வணிகத் தொடர்புக்கு ஆதாரமாக 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரு நெல்வேலி மாவட்டம், திருப்புடை யார் கோயில் கோபுரத்தில் வரை யப்பட்டுள்ள ஓவியம் ஒன்றில், ராமேசுவரம் கடற்கரையில் குதிரை களை ஏற்றி வந்த மரக்கல கப்பலையும், அதில் குதிரைகளோடு அரபு வணிகர்கள் நிற்கும் காட்சி யையும் இன்றும் பார்க்க முடியும்.
ஐந்து முதல் முப்பது மீட்டர் வரையிலும் உயரமாக வளரக்கூடிய பொந்தன்புளி மரங்களின் அடிப்பாக சுற்றளவு சுமார் பதினோரு மீட்டர் விட்டம் கொண்டது. பொந்தன்புளி மரத்தில் இயற்கையாக உருவாகக் கூடிய பொந்துகளில் மனிதன் குடிபுகுந்து, ஆப்ரிக்காவில் வாழவும் செய்கின்றனர்.
பொந்தன்புளி மரங்கள் தமிழ கத்தில் வேகமாக அழிந்து வருவது விவசாயிகளை கவலை அடையச் செய்துள்ளது. இதுகுறித்து ராமநாத புரத்தின் முன்னோடி விவசாயியான தரணி முருகேசன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தமிழகத்தில் பொந்தன்புளி மரங் களை பற்றி கணக்கெடுத்தபோது தனித்தனியாக ராமேசுவரம், பாம் பன், ராமநாதபுரம், ராஜபாளையம், மதுரை அமெரிக்கன் கல்லூரி உள்ளிட்ட சில இடங்களில் சுமார் 20-க்கும் குறைவான மரங்கள் மட்டுமே கண்டறிப்பட்டுள்ளன.
இதன் இலைகள் ஐவிரல் அமைப்புடையது. கிளையின் நுனி யில் 15 செமீ அகலத்தில் வெண்மை நிறப் பூக்களும், நீண்ட காம்புகளில் காய்களும் உருவாகும். பழுப்பு நிறத்தில் உள்ள பொந்தன்புளி பழங்கள், நீண்ட நாட்கள் மரத்தி லேயே தொங்கிக் கொண்டிருக்கும்.
பொந்தன்புளி பழத்தின் சதை மற்றும் சாற்றினை அம்மை நோய்க்கும், இலையை அவித்து காய்ச்சலுக்கும், மரப்பட்டைகளை காயங்களுக்கு மருந்தாகவும், இதன் கனியை சர்பத்தாகவும் பயன்படுத்தலாம்.
வறண்ட மற்றும் கடற்கரை மாவட்டங்களில் பயிரிடுவதற்கு பொந்தன்புளி மரங்கள் ஏற்றது. இதன் கனியில் உள்ள விதையை நாற்று விட்டு நட்டால் 6 மாதங்களில் வளர்ந்த கன்றாக எடுத்துவிட முடியும்.
தமிழகத்தில் அரிதாகக் காணப்படும் பொந்தன்புளி மரங்களை பாதுகாக்க வனத் துறையினர் புதிதாக மரங்களை நட்டும், இருக்கிற மரங்களை பாதுகாக்கவும் வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
29 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago