மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் தாய் திட்ட நிதியை சாலை பணிக்கு வழங்க தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் தாய் திட்டத்துக்கான நிதியை சாலைப்பணிக்கு வழங்குவதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

திருச்சி மணப்பாறை ஊராட்சி ஒன்றியத் தலைவர் அமிர்தவள்ளி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மணப்பாறை ஊராட்சி ஒன்றிய தேர்தலில் வெற்றிப்பெற்று முறைப்படி ஊராட்சி ஒன்றிய தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். நான் ஊராட்சி ஒன்றிய தலைவராக செயல்படுவதற்கு அதிகாரிகள் பல்வேறு இடையூறு செய்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளுக்காக நிதி அந்த திட்டங்களுக்கு பயன்படுத்தாமல் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

தெற்கு சேர்பட்டி சாலை புதுப்பித்தல் பணி ரூ.25 லட்சத்திலும், காரம்பட்டி சாலை பலப்படுத்தல் பணி ரூ.29 லட்சத்திலும் 2019- 2020 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிக்கான நிதியை வேறு திட்டங்களுக்கு செலவிட்டதால், இவ்விரண்டு பணிகளுக்கான பணத்தை தாய் திட்ட சேமிப்பு பணத்திலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளனர்.

சாலைப் பணிகளுக்கு வழங்குவதற்காக தாய் திட்ட சேமிப்பில் உள்ள பணத்தை கடனாக வழங்குவதாகவும், அந்தப்பணத்தை ஒன்றிய பொது நிதியில் வரவு வைத்து மாவட்ட ஆட்சியர் பெயருக்கு வரைவு காசோலையாக அனுப்புமாறும் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமை இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

ஒரு திட்டத்திலிருந்து இன்னொரு திட்டத்துக்கு நிதியை மாற்ற முடியாது. இவ்வாறு செய்தால் ஒன்றிய நி்ர்வாகம் முடங்கும். எனவே, தாய் திட்ட நிதியை வேறு பணிகளுக்கு பயன்படுத்தும் ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குனரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கணபதி சுப்பிரமணியம் வாதிட்டார்.

பின்னர், தாய் திட்ட நிதியை சாலை பணிக்கு வழங்குவது தொடர்பாக ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தும், மனு தொடர்பாக ஆட்சியர், ஊரக வளர்ச்சி முகமை இணை இயக்குநர், மணப்பாறை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப். 12-க்கு தள்ளிவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

19 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

20 hours ago

தமிழகம்

21 hours ago

தமிழகம்

21 hours ago

மேலும்