தமிழக கிரிக்கெட் அணியில் கலக்கும் கோவை மாணவர்கள்

By த.சத்தியசீலன்

கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ஜெகதீசன், ஹரிநிஷாந்த் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால், சையது முஷ்தாக் அலி டி-20 தொடரின் இறுதிச்சுற்றுக்குள் நுழைந்த தமிழக கிரிக்கெட் அணி, பரோடா அணியை 7 விக்கெட் வித்தியசாத்தில் வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 'சையது முஷ்தாக் அலி' தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டி பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. இதில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி சிறப்பாக விளையாடி, வெற்றிகளைக் குவித்தது. இதில், கோவையைச் சேர்ந்த ஜெகதீசன் 364 ரன்களும், ஹரி நிஷாந்த் 250 ரன்களுக்கும் குவித்தனர். அதிகபட்சமாக, ஹைதராபாத், ஒடிசாஅணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் ஜெகதீசன் தலா 78 ரன்கள் எடுத்தார். ஹரி நிஷாந்த், ஜார்க்கண்ட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 92 ரன்கள் குவித்தார். ஜெகதீசன் விக்கெட் கீப்பராகவும், ஹரி நிஷாந்த் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளராகவும் இருப்பது பலம்.

கோவை ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில் முதுநிலைப் பட்டப் படிப்பு படிக்கும் இவர்கள், அடுத்து விஜய் ஹசாரே கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளனர். இதுகுறித்து ஜெகதீசன் கூறும்போது, "கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இரு ஆட்டங்களில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. ஒரு போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக 33 ரன்கள் எடுத்தேன். கடந்த ஆண்டு ரஞ்சிக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடினேன். சையது முஷ்தாக் அலி தொடரில் 364 ரன்கள் குவித்தது மகிழ்ச்சியளிக்கிறது" என்றார்.

மாணவர் ஹரி நிஷாந்த் கூறும்போது, "சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங் ஆகியோர்தான் எனது ரோல் மாடல். தமிழ்நாடு பிரீமியர் லீக்
போட்டியில் திண்டுக்கல் அணிக்காக ஆடியது நிறைய அனுபவங்களைப் பெற்றுத் தந்தது. ஜெகதீசனுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது மகிழ்ச்சியளிக்கிறது. பயிற்சியாளரும், கல்லூரி நிர்வாகமும் மிகவும் ஆதரவாக உள்ளனர்" ன்றனர்.

இவர்களது பயிற்சியாளர் குருசாமி கூறியது: இருவரும் பல ஆண்டாக பயிற்சி பெற்று வருகின்றனர். உடுமலையைச் சேர்ந்த ஹரி
நிஷாந்து பயிற்சிக்காக கோவைக்கு வந்துவிட்டார். இவர்கள் மேலும் நன்றாக விளையாடி, திறமையை நீரூபிக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்