தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை, வேலூர், திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 535 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,503 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (பிப். 04) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"மக்கள்தொகைப் பெருக்கம் மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மக்களின் அத்தியாவசியத் தேவைகளில் முக்கியமான ஒன்றாக விளங்கும் உறைவிடத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், ஜெயலலிதாவால் வெளியிடப்பட்ட தொலைநோக்கு திட்டம் 2023-ன் குடிசைப் பகுதிகளற்ற நகரங்கள் திட்டத்தின் கீழ், தமிழகத்தின் நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இன்றி வாழும் நலிவுற்ற ஏழை எளிய மக்களின் வாழ்வாதார நிலையினை மேம்படுத்த தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் சென்னை மாவட்டம், சிவலிங்கபுரம் திட்டப் பகுதியில் 3 கோடியே 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 32 அடுக்குமாடி குடியிருப்புகள், கேசவப்பிள்ளை பூங்கா பகுதி-2 திட்டப் பகுதியில் 139 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1,056 அடுக்குமாடி குடியிருப்புகள், வடக்கு கிரியப்பா சாலை திட்டப் பகுதியில் 11 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 140 அடுக்குமாடி குடியிருப்புகள், வாலஸ் தோட்டம் திட்டப் பகுதியில் 12 கோடியே 73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 128 அடுக்குமாடி குடியிருப்புகளை முதல்வர் இன்று திறந்து வைத்தார்.
வேலூர் மாவட்டம், கன்னிகாபுரம் திட்டப் பகுதியில் 20 கோடியே 89 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 224 அடுக்குமாடி குடியிருப்புகள், டோபிகானா பகுதி-2 திட்டப் பகுதியில் 5 கோடியே 72 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 64 அடுக்குமாடி குடியிருப்புகள்; திருச்சி மாவட்டம், மணப்பாறை, பொய்கைபட்டி திட்டப் பகுதியில் 8 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 96 அடுக்குமாடி குடியிருப்புகள், வண்ணாரப்பேட்டை (டோபி காலனி) திட்டப் பகுதியில் 31 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 384 அடுக்குமாடி குடியிருப்புகள்; தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பேரூராட்சி, அய்யனார் கோயில் திட்டப் பகுதியில் 31 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 384 அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றையும் முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், கல்லாமேடு திட்டப் பகுதியில் 7 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 100 அடுக்குமாடி குடியிருப்புகள், பிள்ளையார்புரம் திட்டப் பகுதியில் 9 கோடியே 78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 112 அடுக்குமாடி குடியிருப்புகள், திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை, ஜெ.ஜெ. நகர் திட்டப் பகுதியில் 26 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 320 அடுக்குமாடி குடியிருப்புகள், அவிநாசி பேரூராட்சி, சோலை நகர் திட்டப்பகுதியில் 37 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 448 அடுக்குமாடி குடியிருப்புகள், ஈரோடு மாவட்டம், கொல்லம்பாளையம், எம்.ஜி.ஆர். நகர் திட்டப் பகுதியில் 17 கோடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதல்வர் இன்று திறந்து வைத்தார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம், சிக்காச்சியம்மன் கோயில் மேடு திட்டப் பகுதியில் 46 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 480 அடுக்குமாடி குடியிருப்புகள், தப்புகுண்டு திட்டப்பகுதியில் 41 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 431 அடுக்குமாடி குடியிருப்புகள்; வடவீரநாயக்கன்பட்டி திட்டப்பகுதியில் 29 கோடியே 99 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 312 அடுக்குமாடி குடியிருப்புகள்; கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடசேரி மேற்கு, புளியடி திட்டப்பகுதியில் 12 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 120 அடுக்குமாடி குடியிருப்புகளையும் முதல்வர் திறந்து வைத்தார்.
மேலும், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், வாகைகுளம் திட்டப் பகுதியில் 21 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி குடியிருப்புகள், வாகைகுளம் பகுதி-2 திட்டப் பகுதியில் 20 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 535 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,503 அடுக்குமாடி குடியிருப்புகளை தமிழ்நாடு முதல்வர் இன்று திறந்து வைத்தார்".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago