நாளை முதல் புதுச்சேரியில் இருந்து மாஹேவுக்கு பிஆர்டிசி பேருந்து இயக்கம்

By அ.முன்னடியான்

கரோனா ஊரடங்குக்குப் பிறகு நாளை முதல் புதுச்சேரியில் இருந்து மாஹேவுக்கு மீண்டும் பிஆர்டிசி பேருந்து இயக்கப்படுகிறது.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் புதுச்சேரியில் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனிடையே மத்திய அரசு படிப்படியாக அளித்த தளர்வுகளை அடுத்து, புதுச்சேரியில் கடந்த ஆண்டு மே 20ஆம் தேதி முதல் உள்ளூர் பேருந்துகள் இயக்கப்பட்டன.

தொடர்ந்து, கடந்த நவம்பர் 1-ம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து தமிழகம் உள்ளிட்ட இதர மாநிலங்களுக்குப் பொதுப் போக்குவரத்து இயக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பெங்களூரு, திருப்பதி, குமுளி உள்ளிட்ட பகுதிகளுக்கு பிஆர்டிசி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாஹேவுக்குப் பேருந்து இயக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நாளை (பிப் 4) முதல் புதுச்சேரியிலிருந்து மாஹேவுக்கு பிஆர்டிசி பேருந்து இயக்கப்படுகிறது. இந்தப் பேருந்து ஒருநாள் விட்டு ஒருநாள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுச்சேரியிலிருந்து நாளை மாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு கடலூர், வடலூர், விருத்தாச்சலம், சேலம், கோயம்புத்தூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு வழியாக மாஹேவுக்குச் சென்றடைகிறது.

இதே பேருந்து மறுநாள் 5-ம் தேதி மாஹேவில் இருந்து மாலை 4.30 மணிக்குப் புறப்பட்டு இதே வழியாக புதுச்சேரி வந்தடைகிறது. இதுபோல் 6-ம் தேதி புதுச்சேரியில் இருந்து மாலை 5.30 மணிக்கு இந்தப் பேருந்து புறப்பட்டு மாஹேவுக்குச் செல்கிறது.

இதற்கான பயணக் கட்டணம் முன்பதிவுக் கட்டணத்துடன் சேர்த்து ரூ.705 வசூலிக்கப்படுகிறது. மாஹே செல்லும் பொதுமக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் மற்றும் பயணிகளுக்கும் இது ஓர் நற்செய்தியாகும் என பிஆர்டிசி அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்