புதுச்சேரி வில்லியனூர் அருகே செல்போனில் தொடர்ந்து ஆன்லைனில் கேம் விளையாடிய பிளஸ் 2 மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள வி.மணவெளி அன்னை தெரேசா நகரைச் சேர்ந்தவர் பச்சையப்பன். இவர் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் தர்ஷன் (16). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் நேற்று (பிப் 1) மாலை வீட்டின் அறையில் அமர்ந்துகொண்டு செல்போனில் ஃபயர்வால் எனும் ஆன்லைன் கேமைத் தொடர்ந்து 4 மணி நேரமாக விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
காதில் ஹெட்செட் வைத்துக்கொண்டு அதிக சத்தத்துடன் விளையாடிய நிலையில், அவர் திடீரென மயங்கிக் கீழே விழுந்து கிடந்தார். இதனைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து மாணவர் தர்ஷனை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாணவரின் தந்தை பச்சையப்பன் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் குமார் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மாணவரின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ் 2 மாணவர் செல்போனில் ஆன்லைன் கேம் விளையாடி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் வி.மணவெளி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago