தேர்தல் நெருங்குவதால் ஸ்டாலின் எம்ஜிஆரை பெரியப்பா, சித்தப்பா எனக் கூறுகிறார் என அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல் தொணியில் பேசியுள்ளார்.
மதுரை கோவில்பாப்பாகுடி பகுதியில் ரூ.25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் ரூ.1 கோடியே 61 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளைக் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து மதுரை கோவில்பாப்பாகுடியில் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘திமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நலனுக்காக எந்தத் திட்டமும் கொடுக்கவில்லை. அதனால், அவர்களுக்கு எதைச் சொல்லி பிரச்சாரம் செய்வது என்பது தெரியவில்லை.
தேர்தல் நெருங்குவதால் ஸ்டாலின், எம்ஜிஆரை பெரியப்பா, சித்தப்பா எனக் கூறுவார். முரசொலியில் எம்ஜிஆரை இழிவாகவும், வாங்காத கப்பலை வாங்கியதாகவும் சொல்லியவர்கள், எழுதியவர்கள் திமுகவினர்.
எம்ஜிஆரை திமுக தலைவர் கருணாநிதி இழிவாகப் பேசியபோது, எம்ஜிஆர் சித்தப்பா என தெரியவில்லையா? அவரைக் கட்சியைவிட்டு நீக்கும் போது கலைஞரிடம் சித்தப்பாவை நீக்காதீர்கள் எனைக்கூறி ஸ்டாலின் அடம் பிடித்திருக்கலாமே?
எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோது ஸ்டாலின், அவர் கூறும் அந்த பெரியப்பா கட்சியில் சேர்ந்திருக்கலாம்.
அதையெல்லாம் செய்யாமல் தேர்தல் நேரத்தில் எம்ஜிஆரை பெரியப்பா, சித்தப்பா என நடிக்கிறார்.
எந்தத் தலைவருக்கும், யாருக்கும் இல்லாத செல்வாக்கு எம்ஜிஆருக்கு உண்டு. இதை ஸ்டாலின் மட்டும் இல்லை அவர் தந்தையும் ஒரு காலத்தில் சொல்லியுள்ளார். 'எம்ஜிஆர் எனது ஆருயிர் நண்பர். தற்போது அவர் இல்லை. ஆகையால் என்னைத் தேர்ந்தெடுங்கள்' எனக்கூறியவர் கருணாநிதி.
அப்பாவுக்கு தப்பாமல் பிறந்துள்ளார் ஸ்டாலின். கலைஞரின் பொய்யை நம்பி அன்று மக்கள் ஓட்டு போடவில்லை. தற்போது எம்ஜிஆரை பெரியப்பா, சித்தப்பா எனக்கூறினாலும் மக்கள் நம்பத் தயாராகவில்லை.
மக்கள் ஒரு மனதாக முதல்வராக எடப்பாடியாரை தீர்மானம் செய்துவிட்டனர். மத்திய அரசு பட்ஜெட்டில் ரேஷன் கடை பொருட்களில் விலை உயர்த்தினாலும் நாம் இலவசமாக தான் கொடுக்கிறோம். அதனால் எந்த பாதிப்பும் இல்லை, ’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago