மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி இலவச டேட்டா திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

கல்லூரி மாணவர்களுக்கு தினமும் 2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். இத்திட்டத்தின் மூலம் 9,69,047 மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

கரோனா தொற்று அதிகரித்ததை அடுத்து நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் ஊரடங்கு அமலானது. பொதுமக்கள் அதிகம் கூடும் சுற்றுலாத் தலங்கள், திரையரங்குகள், மால்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. கல்லூரிகளிலும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. இந்தக் கல்வி ஆண்டில் மாணவர்கள் கல்வி பயில கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த வழிவகுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடங்களைப் படித்து வருகின்றனர்.

ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலும் இணைய டேட்டாக்களை நம்பியுள்ளன. பெரும்பாலான மாணவர்கள் கிராமப்புறத்திலும், ஏழ்மை நிலையிலும் உள்ளதால், அவர்களால் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க இணையதள வசதி இல்லை என்கிற பிரச்சினை எழுந்தது. இதையடுத்து ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள ஏதுவாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள், இன்ஜினீயரிங் கல்லூரிகள், கல்வி உதவித்தொகை பெறும் சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை எல்காட் நிறுவனம் மூலம் இலவச டேட்டா கார்டு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கான தினமும் 2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்துகொள்ள வாய்ப்பு ஏற்படும். இத்திட்டத்தின் மூலம் 9,69,047 மாணவர்கள் பயன்பெறுவார்கள். இவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா பெற்றிட எல்காட் நிறுவனத்தின் மூலமாக, விலையில்லா டேட்டா கார்டு வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்