தீ செயலி விழிப்புணர்வுகாக சென்னையில் இருந்து சிதம்பரம் வரை சைக்கிளில் சென்று தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
தமிழக அரசு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் தீ செயலி விழிப்புணர்வுகாக நேற்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு சிதம்பரம் வரை 220 கிலோ மீட்டர் சைக்கிளில் சென்ற 7 பேர் கொண்ட குழுவினர். இன்று (ஜன.31) மதியம் கடலூர் வந்தனர். பின்னர் அவர்கள் கடலூர் பீச் ரோட்டில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பதிவேடுகள், மீட்பு உபகரணங்களையும் ஆய்வு செய்தார். பின்னர் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.
தொடர்ந்து கடலூர் சிப்காட், சிதம்பரத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.
மாலை 7 மணியளவில் சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும் போது கடந்த ஆண்டு தமிழகத்தில் தீ குறித்து 21 ஆயிரம் அழைப்புகள் வந்துள்ளது, அதேப்போல் குழந்தைகள், கால் நடைகள் பாதிப்புகள் குறித்தும் 23 ஆயிரம் அழைப்புகள் தீயணைப்பு நிலையங்களுக்கு வந்துள்ளது.
தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தீ செயலியில் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த சைக்கிள் மேற்கொள்ளப்பட்டது. தீ செயலில் புகார் தெரிவித்தால் அந்த புகார் சென்னை தலைமை அலுவலகத்துக்கு வரும் உடன் சம்பந்தப்பட்ட தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இந்த செயலிலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
நேற்று காலை சென்னை அடையாறு பகுதியில் உள்ள மத்திய கைலாஷ் என்ற இடத்தில் இருந்து சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு துவக்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago