தமிழக சட்டப்பேரவைக்கு மார்ச் மாதத்திலேயே தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கு மார்ச் மாதத்திலேயே தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை என மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறினார்.

தேர்தல் நடத்தும் அலுவர்களுக்கு பேரவைத் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக 4 நாட்கள் பயிற்சி முகாம் திருச்சி சாரநாதன் பொறியியல் கல்லூரியில் நேற்று நிறைவடைந்தது.

அப்போது, சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் 20 மாவட்டங்களைச் சேர்ந்த 118 தேர்தல் நடத்து்ம் அலுவலர்களுக்கு திருச்சியிலும், மீதமுள்ள 116 தேர்தல் அலுவலர்களுக்கு சென்னையிலும் பயிற்சி நடைபெற்றது.

சட்டப்பேரவைக்கு மார்ச் மாதமே தேர்தல் நடத்தப்படலாம் என்பதற்கு வாய்ப்பில்லை. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாக பிரச்சாரம் செய்ய தடையில்லை என்றாலும், அதற்கு விதிமுறைகள் உள்ளன. இந்த விதிமுறைகளை மீறியது தொடர்பாக வந்த புகார்கள் மீது தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் நேரத்தில் சட்டவிரோத பணப்பரிமாற்றம், வாக்காளர்களுக்கு ஆன்லைன் மூலமாக பணப்பரிமாற்றம் உள்ளிட்டவற்றை கண்காணிக்க மாநில அளவில் வருமான வரி, சுங்கத்துறைகள், ரிசர்வ் வங்கி, வங்கிகளின் மூத்த அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளது. 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் அஞ்சல் வாக்கு செலுத்த விரும்பினால் விண்ணப்பிக்கலாம். இது கட்டாயமல்ல என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்