செங்கல்பட்டு தடத்தில் 17 மின்சார ரயில்களின் சேவை நாளை ரத்து: சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு யார்டில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதால், இந்த தடத்தில் நாளை (ஜன. 31) 17 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்படுகின்றன. இருப்பினும், சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில்களின் இயக்கத்தை கருத்தில் கொண்டு செங்கல்பட்டு யார்டில் மேம்பாட்டு பணிகள் நாளை காலை 6.55 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடக்கவுள்ளன. எனவே, இந்த தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, அரக்கோணம்-செங்கல்பட்டுக்கு காலை 5.35, செங்கல்பட்டு-அரக்கோணம் காலை 8.20 மற்றும் சென்னை கடற்கரை-திருமால்பூர் மாலை 6, காஞ்சிபுரம் மாலை 6.40, செங்கல்பட்டுக்கு அதிகாலை 4.55, காஞ்சிபுரத்துக்கு அதிகாலை 5.45, செங்கல்பட்டுக்கு காலை 6.25, 7.05, 7.40, மாலை 3, 3.50 மணி ரயில்களின் சேவை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.

செங்கல்பட்டு-சென்னை கடற்கரை காலை 7.25, 8.10, 8.50, 9.05, மாலை 5, 5,50 மணிக்கு செல்ல வேண்டிய மின்சார ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு மாற்றாக பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 4.55, 5.45, காலை 6.25, 7.05, 7.40 மாலை 5, 5.50 மணிக்கு சிங்கப்பெருமாள் கோயிலுக்கு மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

இதேபோல், சிங்கப்பெருமாள்கோவிலில் இருந்து காலை 6.40, 7.35, 8.20, 9, 9.35, மாலை 5.10, 6 மணிக்கு சென்னை கடற்கரைக்கு மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

ஒரு பகுதி மட்டும் ரத்து: சென்னை கடற்கரை-செங்கல்பட்டுக்கு காலை 6, 6.45, 10.35, 11.15, மதியம் 12, 1, 2 மணி ரயில்களும், சென்னை கடற்கரை-திருமால்பூர் மதியம் 1.30 மணி ரயிலின் சேவைகளில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

இதேபோல், காஞ்சிபுரம்-சென்னை கடற்கரை காலை 7.05, 9.45 மணி திருமால்பூர்-சென்னை கடற்கரை காலை 7.50, மாலை 6.15, செங்கல்பட்டு-சென்னை கடற்கரை காலை 8.30, 10.15, 11, மதியம் 1.25, 2.15, மாலை 3.05, 4.05 மணி மின்சார ரயில்கள் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்