என்னைப் பற்றிப் பேச ஆ.ராசாவுக்குத் தகுதியில்லை; விரைவில் திகார் சிறையில் இருப்பார்: ஹெச்.ராஜா பேட்டி

By இ.ஜெகநாதன்

‘‘ஊழல் செய்த ஆ.ராசாவுக்கு என்னைப் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை. 2ஜி ஊழலுக்காக விரைவில் திகார் சிறையில் இருப்பார்’’ என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.

இதுகுறித்து ஹெச் .ராஜா சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேசத்துரோகி, ஊழல் பெருச்சாளி ஆ.ராசாவுக்கு என்னைப் பற்றிப் பேசத் தகுதியில்லை. 2ஜி வழக்கில் விரைவில் திகார் சிறையில் இருப்பார்.

ஸ்டாலினையே வேல் தூக்க வைத்த முருகப் பெருமானின் சக்தி அற்புதம். தமிழகத்தில் முருகனின் புரட்சி ஆரம்பம். பக்தர்கள் தைப்பூசத்திற்குப் பழனிக்குச் சென்றால் மட்டும் போதாது. திருநீறு பூசினால் மட்டும் போதாது. முருகனை இழிவுபடுத்தும் கருப்பர் கூட்டத்திற்கு உதவி செய்யும் ஸ்டாலினையும், திமுகவையும் ஒரு சீட் கூட ஜெயிக்கவிடக் கூடாது. இப்படிச் செய்யவில்லை என்றால் பழனிக்குப் போவதோ, திருநீறு பூசுவதோ போலித்தனம்” என்று கூறினார்.

சசிகலா குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, பதிலளிக்க விரும்பவில்லை என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்